Advertisment

அட, மறுபடியும் அம்மா- மகள் காம்போ: எந்த டி.வி-யில்?

சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியில் தனது மகள் சாராவுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

author-image
WebDesk
New Update
அட, மறுபடியும் அம்மா- மகள் காம்போ: எந்த டி.வி-யில்?

சின்னத்திரையின் தற்போதைய முன்னணி சேனல்களில் ஒன்றாக இருக்கும் சன்.டிவியில் காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் அர்ச்சனா. அடுத்து இளமை புதுமை, என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர், தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

Advertisment

தொடர்ந்து முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்த அர்ச்சனா 2004-ம் ஆண்டு தனது திருமணத்திற்கு பின் சின்னத்திரையில் இருந்து விலகினார். இந்த இடைவெளியில் அவருக்கு குழந்தை பிறந்த நிலையில், சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழில் தொகுப்பாளியாக களமிறங்கினார்.

ஜீ தமிழின் சரிகம என்ற நிகழ்ச்சியின் மூலம் ரீ எண்டரி கொடுத்த அர்ச்சனா அதே சேனலின் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியில் தனது மகள் சாராவுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தாய் மகள் இருவரும் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது சின்னத்திரை வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

சின்னத்திரை மட்டுமல்லாது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள அர்ச்சனா ரோடியோ ஜாக்கியாவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்ற அவருக்கு அதிகப்படியாக நெகடீவ் விமர்சனங்கள் வந்தது.

ஆனாலும் இந்த விமர்னங்களுக்கு அர்ச்சானவின் மகள் சாரா அளித்த பதில் பலரின் பாராட்டுக்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து அர்ச்சனா மற்றும் அவரது மகள் குறித்து சமீப காலமாக எதுவும் தகவல்கள் இல்லாத நிலையில், தற்போது தாய் மகள் இருவரும் மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் களத்தில் குதித்துள்ளனர்.

ஜீ தமிழின் சூப்பர் மாம் சீசன் 3 ஷோ விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா மீண்டும் தனது மகள் சாராவுடன் இணைந்து தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி தொடர்பான ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக நடிகை குஷ்பு பங்கேற்க உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vj Archana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment