VJ Archana Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்ற சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலில் நடிகை ஆல்யா மானசாவும் நடிகர் சஞ்ஜீவும் ஜோடியாக நடித்தனர். இருவரும் சீரியலில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை கடந்த 2020 ஆம் ஆண்டு பிறந்தது.
ராஜா ராணி சீரியலுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, விஜய் டிவியில் ராஜா ராணி 2 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முதலில் சித்து மற்றும் ஆல்யா மானசா ஜோடியாக நடித்தனர். ஆரம்பத்தில் சீரியல் நன்றாக ஓடிக் கொண்டிருந்த நிலையில், பின் நிறைய கதாபாத்திர மாற்றங்களில் மாற்றம் நடந்தது. முக்கியமாக கதாநாயகிகளாக மட்டும் 3 பேர் மாறினார்கள். பின்னர் சீரியலுக்கும் என்ட் கார்டு போடப்பட்டது.
உடல் எடையை குறைத்த ராஜா ராணி சீரியல் வில்லி நடிகை
இந்நிலையில், இந்த சீரியலில் வில்லியாக நடித்து வந்த அர்ச்சனா உடல் எடையை குறைத்த டிப்ஸை பகிர்ந்துள்ளார். இந்த சீரியலில் அர்ச்சனா வில்லி கதாபாத்திரத்தில் நடித்த போது ரசிகர்களிடம் ஏகப்பட்ட திட்டுகளை வாங்கினார். ஆனால், இந்த சீரியலில் இருந்து பாதியில் வெளியேறிய அவர் இப்போது உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டார்.

அர்ச்சனா உடல் எடையை குறைக்கும் டிப்ஸாக, காலையில் எழுந்தவுடன் சுடு தண்ணீர், பசிக்கும் போது மட்டுமே குறைவான அளவு சாப்பாடு, அதாவது 3 இட்லி என்ற இடத்தில் 1 இட்லி சாப்பிட்டு அதனுடன் நிறைய புரோட்டின் எடுத்து கொள்வாராம். வீட்டிலேயே உடல் எடையை குறைக்கும் வகையில் சில உடற் பயிற்சிகள் செய்வாராம். இதுபோன்ற சில விஷயங்களை செய்து தனது உடல் எடையை குறைத்ததாக கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil