விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் விஜே பாவனா. சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர். தவிர, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலிலும் கிரிக்கெட் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.
பரதநாட்டியம், டப்பிங் ஆர்டிஸ்ட், தொகுப்பாளினி என பன்முகத்தன்மை காட்டி வரும் பாவனா, மும்பையை சேர்ந்த நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கவனத்தை செலுத்தி வரும் இவர் ரித்திக் ரிஷான், டைகர் ஷெராஃப் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த "வார்" படத்தை பார்த்து ட்விட் செய்துள்ளார்.
5, 2019
அதில், #WarMovieReview என குறிப்பிட்டு பொதுவாக ஆண்களுக்கு விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள், கார் சேசிங் மற்றும் ஹாலிவுட் போன்ற சண்டைக்காட்சிகளுக்காக படத்தை ரசிப்பார்கள். ஆனால், பெண்களுக்கு படம் பிடிக்க இரண்டு முக்கிய காரணம் உண்டு அது ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் மட்டும் தான். ஹிருத்திக் உண்மையில் இன்னும் அதிக திரைப்படங்களில் நடிக்க வேண்டும். மேலும் அவர் விந்தணு தானம் கூட செய்யவேண்டும். கோ வாட்ச்..! #war என வித்தியாசமான முறையில் ட்விட் பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த ட்வீட்க்கு நெட்டிசன்கள் விடாமல் கிண்டல் செய்து வருகின்றனர். அவர் இதற்கு பிறகு பல ட்வீட்களை போட்டுவிட்டார். ஆனால், தேடித் தேடி பாவனாவுக்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.