Advertisment

சித்ரா மரணம் தற்கொலை தான்: உடற்கூறாய்வில் உறுதி

செவ்வாய் கிழமை இரவு 8 மணியளவில் ஃபோனில் பேசிய சித்ரா, தான் ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியில் இருப்பதாக அவரது அம்மா கூறினார்.

author-image
WebDesk
New Update
VJ Chithra Suicide, Tamil Serial News

VJ Chithra Suicide, Tamil Serial News

VJ Chithra Suicide:  நடிகை சித்ரா மரணம் தற்கொலை தான் என உடற்கூறு ஆய்வில் உறுதியாகியுள்ளது. கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 டாக்டர்கள் ஒன்றரை மணி நேரமாக நடத்திய பிரேத பரிசோதனையின் முடிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

வாழ்க்கை துணை குழப்பத்தில் இருந்த சித்ரா? சக நடிகர்கள் சொல்வது என்ன?

விஜய் டிவியின் ’ஸ்டார்ட் மியூஸிக்’ என்ற படப்பிடிப்பில் கலந்துகொண்டு புதன் கிழமை அதிகாலை அருகிலிருந்த ஹோட்டலில் தங்கி இருக்கிறார் சித்ரா. அவருடன் நிச்சயமான ஹேமந்த் ரவியும் அந்த ஹோட்டலில் இருந்திருக்கிறார். இந்நிலையில் குளிக்க போவதாக சொன்ன சித்ரா, ஹேமந்த்தை வெளியில் செல்லும் படி சொல்லி இருக்கிறார். வெளியில் வந்து வெகு நேரம் ஆகியும், சித்ரா கதவைத் திறக்காததால், ஓட்டல் ஊழியரிடம் இருந்த மாற்று சாவி மூலம் அறையைத் திறந்து பார்த்திருக்கிறார் ஹேமந்த். அப்போது அங்கிருந்த மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு சித்ரா, தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட சின்னத்திரை நடிகர்களும், ரசிகர்களும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

VJ Chithra Suicide, Tamil Serial News ஹோம்லியாக...

இதற்கடுத்த விசாரணையில் சித்ராவும் ஹேமந்தும் 2 மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்துக் கொண்டது தெரிய வந்தது. இதனால் அவரின் மரணம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இன்று சித்ராவின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. இதன் முடிவில் அவர் தற்கொலை செய்துக் கொண்டு தான் இறந்தார் என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சித்ரா முகத்தில் காயம்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சித்ராவின் தாயார், பதிவுத் திருமணம் நடந்தாலும், முறைப்படியான திருமணத்துக்காக, திங்கட்கிழமை மண்டபம் பார்த்ததாகவும், செவ்வாய் கிழமை இரவு 8 மணியளவில் ஃபோனில் பேசிய சித்ரா, தான் ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியில் இருப்பதாகவும், முடித்து விட்டு வர நேரமாகும் என சொன்னதாகவும் தெரிவித்தார். முன்பெல்லாம் எப்போதும் தான் சித்ராவுடன் படபிடிப்புக்கு சென்று வந்ததாகவும், திருமணம் ஆன பிறகு இனி மாப்பிள்ளை பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் இருந்ததாகவும் குறிப்பிட்டார். தன் மகள் மிகவும் தைரியசாலி எனவும், தற்கொலை செய்துக் கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை எனவும் குறிப்பிட்ட சித்ராவின் அம்மா, தனது மகள் மரணத்துக்கு ஹேமந்த் ரவி தான் காரணம் என்றார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Vijay Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment