அம்மாவும், கணவரும் கொடுத்த மன அழுத்தமே சித்ரா தற்கொலைக்கு காரணம் – காவல்துறை

தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் தரப்பில் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கிய காரணம்.

VJ Chithra Suicide, Pandian Stores Mullai Death
வி.ஜே.சித்ரா

VJ Chithra : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜய் டிவியின் ’ஸ்டார்ட் மியூஸிக்’ என்ற படப்பிடிப்பில் கலந்துகொண்டு புதன் கிழமை அதிகாலை அருகிலிருந்த ஹோட்டலில் தங்கி இருக்கிறார் சித்ரா. அவருடன் நிச்சயமான ஹேமந்த் ரவியும் அந்த ஹோட்டலில் இருந்திருக்கிறார். இந்நிலையில் குளிக்க போவதாக சொன்ன சித்ரா, ஹேமந்த்தை வெளியில் செல்லும் படி சொல்லி இருக்கிறார். வெளியில் வந்து வெகு நேரம் ஆகியும், சித்ரா கதவைத் திறக்காததால், ஓட்டல் ஊழியரிடம் இருந்த மாற்று சாவி மூலம் அறையைத் திறந்து பார்த்திருக்கிறார் ஹேமந்த். அப்போது அங்கிருந்த மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு சித்ரா, தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட சின்னத்திரை நடிகர்களும், ரசிகர்களும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

VJ Chithra Dead Body
வி.ஜே.சித்ராவின் உடல்

சித்ராவின் மரணம் கொலையா, தற்கொலையா என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கிடையே சித்ராவின் மரணம் தற்கொலை தான் என உடற்கூறாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனது மகள் மிகவும் தைரியசாலி என்றும், அவள் மரணத்திற்கு ஹேமந்த் ரவி தான் காரணம் எனவும், சித்ராவின் அம்மா குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் தரப்பில் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கிய காரணம் எனவும், சித்ராவின் கணவர் ஹேம்நாத் குடித்துவிட்டு, படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சண்டையிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் தற்போது காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vj chithra suicide pandian stores mullai hemnath ravi vj chithu

Next Story
எஸ்.பி.பிக்கு வன அஞ்சலி: 7 ஸ்வரங்கள் பாட இருக்கும் 74 மரங்கள்!Coimbatore pays a green tributes to playback singer SP Balasubrahmanyam
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X