பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘முல்லை’ விஜே சித்ரா திடீர் தற்கொலை: அதிர்ச்சியில் கலைத்துறை

தன்னுடன் நிச்சயம் ஆன ஹேம்நாத் என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந்துள்ளார்.

VJ Chithra Suicide, Tamil Serial News
VJ Chithra Suicide, Tamil Serial News

VJ Chithra: சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா(29). இதற்கு முன்பு வி.ஜே-வாக இருந்த இவர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு, வேறு சில சீரியல்களிலும் நடித்துள்ளார். ஆனால் ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது பாண்டியன் ஸ்டோர்ஸ், முல்லை கதாபாத்திரம் தான். இன்று 09.12.20-ம் தேதி அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு படபிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ளார் சித்ரா.

விஜே சித்ரா தற்கொலை – மலையாளத்தில் படிக்க

VJ Chithra Suicide, Tamil Serial News
வி.ஜே.சித்ரா

தன்னுடன் நிச்சயம் ஆன ஹேம்நாத் என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், சித்ரா தான் குளிக்கச் செல்வதாக கூறி ஹேம்நாத்தை, ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால் அறையின் கதவை தட்டியதாகவும் ஹேமநாத் தெரிவித்துள்ளார்.

ஆனால் வெகுநேரம் ஆகியும் சித்ரா கதவை திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு சித்ரா தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்துள்ளது. தற்போது இது குறித்து நசரத் பேட்டை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vj chithra suicide pandian stores mullai suicide

Next Story
ஆரி – பாலாவின் தனிப்படை.. இனி என்ன ஆகும் அர்ச்சனாவின் நிலை!Bigg Boss Tamil 4 Promo
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com