இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்

நடிகை விஜே சித்ரா இறப்பதற்கு முன் நடித்த கால்ஸ் திரைப்படத்தை பார்த்து கண்கலங்கிய சித்ராவின் பெற்றோர்கள், சீரியல் பிரபலங்கள் “இப்படி ஒரு நல்ல படத்தை பார்க்காமலே சித்ரா போய்விட்டாரே’ என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

vj chitra acts calls movie, calls movie, vj chitra, vj chitra, விஜே சித்ரா, கால்ஸ், கால்ஸ் திரைப்படம், விஜே சித்ரா, celebrities screening with tears, pandian stores chitra

நடிகை வி.ஜே சித்ரா இறப்பதற்கு முன்பு நடித்த  கால்ஸ் படத்தைப் பார்த்த பிரபலங்கள் இவ்வளவு நல்ல படத்தைப் பார்க்க இப்போ சித்ரா இல்லையே என்று கண்ணீவிட்டுள்ளனர்.

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி டிவி சீரியல் நடிகையாகி புகழ்பெற்று சினிமா நடிகையாக உயர்ந்த நிலையில், விஜே சித்ரா திடீரென தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதிர் ஜோடிக்கு என்று டிவி சீரியல் ரசிகர்கள் பலர் இருந்தனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விஜே சித்ரா முல்லை கதாபாத்திரத்தில் நடித்தார். ரசிகர்களின் நீங்கா இடம் பிடித்த நடிகை சித்ரா இறப்பதற்கு முன்பு கால்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமில்லாமல் பிறமொழி பேசும் மக்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. டிரெய்லரில் சித்ராவின் நிஜவாழ்க்கையுடன் பொருந்திப் போகிறமாதிரி வசனங்கள் இருப்பதாக ரசிகர்களும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

நடிகை சித்ரா சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு எடுத்து காட்டாக பார்க்கப்பட்ட சூழலில்தான் அவர் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகை விஜே சித்ரா இறப்பதற்கு முன் நடித்த கால்ஸ் திரைப்படத்தை இயக்கிய ஜெ.சப்ரீஷ் அந்த திரைப்படத்தை சித்ராவின் பெற்றோர் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு முதல்முறையாக போட்டு காண்பித்துள்ளார். கால்ஸ் படத்தைப் பார்த்த சித்ராவின் பெற்றோர்கள், சீரியல் பிரபலங்கள் கண் கலங்கி “இப்படி ஒரு நல்ல படத்தை பார்க்காமலே சித்ரா போய்விட்டாரே’ என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

கால்ஸ் திரைப்படம் இன்று (பிப்ரவரி 26) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு சித்ராவின் ரசிகர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கால்ஸ் திரைப்படம் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக, இந்த படத்தை சென்னை திரையரங்குகளில் காண பெண்களுக்கு அனுமதி இலவசம் என்று படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.

கால்ஸ் திரைப்படத்தை பெண்கள் இலவசமாக பார்க்கலாம் என்று அறிவித்திருக்கும் செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இலவச டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள 9176382842 என்ற தொலைபேசி எண்ணையும் படக்குழுவினர் இணைத்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vj chitra acted calls movie screening celebrities tears

Next Story
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!vijay tv anchor vj ramya, vj ramya photos, vijay tv, விஜே ரம்யா, விஜே ரம்யா புகைப்படம் வைரல், சங்கத்தலைவன், vj ramya village woman look photo, vj ramya acting in sangathalaivan movie, actress vj ramya
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com