விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமான விஜே சித்ரா இறப்பதற்கு முன்பு கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்ற நடிகை சரண்யா துரடி அந்த நிகழ்ச்சியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், அந்த சிரித்த முகம் நினைவுகளில் உறைந்துள்ளதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானார். விஜே சித்ரா கடந்த டிசம்பர் மாதம் பூந்தமல்லி அருகே நசரேத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விஜே சித்ராவின் மரணம் திரையுலகினரை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி பார்வையாளர்களையும் உலுக்கியது. சித்ராவின் மரணத்தை தொடர்ந்து அவரைப் பற்றி வீடியோக்கள் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
விஜே சித்ராவின் தோழியும் நடிகையுமான சரண்யா துரடி சமூகத்தில் ஒரு இடுகையை பகிர்ந்துள்ளார். உண்மையில், அவர் இறப்பதற்கு முன்பு, சித்ரா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சி இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பானது. சித்ரா கடைசியாக பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அவருடன் சரண்யாவும் பங்கேற்றார்.
இந்த நிலையில், நடிகை சரண்யா டிவி நிகழ்ச்சியில் விஜே சித்ராவுடன் பங்கேற்ற படங்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடுகையில், “மறக்கமுடியாத நிகழ்ச்சி. இது உங்கள் கடைசி புகைப்படம் என்பதால் இது பற்றி மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். உங்களுடைய லட்சக் கணக்கான ஃபாலோவர்களைப் போலவே மீண்டும் ஒரு முறை திரையில் பார்க்க நான் காத்திருக்கிறேன். இறுதியாக இன்று ஒளிபரப்பானது. “நாங்கள் ஒன்றாக எடுத்த செல்ஃபிகள் உங்கள் தொலைபேசியில் உள்ளது. மேலும் உங்கள் மனதில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நினைவுகள். கனமான இதயத்துடன் உங்களிடம் விடைபெறுகிறது. இது நம்முடைய கடைசி புகைப்படமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் அதை மறக்க முடியாததாக ஆக்கியுள்ளீர்கள். உங்கள் இந்த புன்னகை முகம் எங்கள் நினைவுகளில் உறைந்திருக்கிறது விஜே சித்ரா.” என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"