இப்படியெல்லாமா செய்வாங்க… விஜே சித்ராவின் வேற லெவல் ரசிகை!

மறைந்த நடிகை விஜே சித்ராவின் பெயரை அவருடைய தீவிர ரசிகை ஒருவர், சித்து என்று பச்சைக் குத்தியுள்ள புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

vj chitra, actress vj chitra, vj chitra death, vj chitra name tattoo, fan tattoo vj chitra name, விஜே சித்ரா, விஜே சித்ரா பெயரை பச்சை குத்திய ரசிகை, vj chitra name tattoo photo, vj chitra tattoo photo viral

மறைந்த நடிகை விஜே சித்ராவின் பெயரை அவருடைய தீவிர ரசிகை ஒருவர், சித்து என்று பச்சைக் குத்தியுள்ள புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சித்ராவின் பெயரை பச்சைக் குத்தியுள்ளதைப் பார்த்த நெட்டிசன்கள் இப்படியெல்லாமா செய்வாங்க… வேற லெவல் ரசிகை என்று கூறி வருகின்றனர்.

தொலைக்காட்சியி தொகுப்பாளினியாக அறிமுகமாகி டிவி சீர்யல் நடிகையாக உயர்ந்தவர் நடிகை விஜே சித்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த வரவேற்பால் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலி கதிர் – முல்லை ஜோடி ரசிகர்களால் பெரிதும் ரசித்து வரவேற்றார்கள். அதிலும் குறிப்பாக, சித்ராவின் நடிப்புக்காகவே பலரும் அந்த சீரியலைப் பார்த்தார்கள். இதனால், விஜே சித்ராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அவருடைய ரசிகர்கள் அவரை சித்து என்று செல்லமாக அழைத்தனர்.

சீரியலில் பிரபலமான விஜே சித்ரா கால்ஸ் என்ற திரைப்படத்திலும் நடித்தார். ஆனால், அந்த படம் ரீலிஸ் ஆகி அதைப் பார்ப்பதற்கு முன்னரே, சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார்.

விஜே சித்ரா திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சின்னத்திரை நடிகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜே சித்ராவை அவருடைய கணவர் ஹேம்நாத் தற்கொலைக்கு தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அண்மையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதனிடையே, விஜே சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படம் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் சித்ராவின் நடிப்பை பார்த்து பாராட்டிய பிரபலங்கள் இதையெல்லாம் பார்க்க அவர் இல்லையே என்று வருத்தம் தெரிவித்தனர்.

விஜே சித்ரா இறந்து 3 மாதங்கள் ஆனாலும் ஊடகங்களிலும் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அவர் தொடர்பான செய்தி வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. அதற்கு காரணம், விஜே சித்தா அந்தளவுக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Bharusam (@chithuvj_darling_addict)

அப்படி விஜே சித்ராவின் தீவிர ரசிகை ஒருவர் சித்து என்று தனது கையில் பச்சை குத்தியுள்ளார். இது சித்ராவின் மீது அந்த ரசிகை வைத்துள்ள தீவிர அன்பை காட்டும் விதமாக அமைந்துள்ளது. ரசிகை சித்ராவின் பெயரை பச்சைக் குட்தியுள்ள புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானது. இந்த புகைப்படத்தைப் பார்த்த சித்ராவின் ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளார்கள். சித்ராவுக்கு இப்படி ஒரு ரசிகையா என்று வியதுபோன நெட்டிசன்கள், ரசிகை என்றால் இப்படியெல்லாமா செய்வாங்க… வேற லெவல் ரசிகை என்று கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vj chitra fan tattoo her name photo goes viral

Next Story
அதே டைட்டில்… அதே மாதிரி ஹீரோ… விஜய் டிவி சீரியலில் கமல்ஹாசன் டச்சிங்!Tamil serial news in tamil kamalhaasan’s rajapaarvai titled to vijay tv’s serial
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com