விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கிய வி.ஜே சித்ரா அதன்பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்தார். யாரிடமும் எளிதில் பழகும் குணம் கொண்ட சித்ரா தான் இருக்கும் இடங்களை சுற்றி உள்ளவர்கள் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் திறன் உள்ளவர்.
Advertisment
எட்டு ஆண்டுகளில் ஒரு தொலைக்காட்சி ஆளுமை மற்றும் நடிகையாக பார்வையாளர்களையும் அவரது தொழில்துறை நண்பர்களையும் மிகவும் கவர்ந்துள்ள அவர், ஒரு வாரத்திற்கு முன்பு மரணமடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடைசியாக டிசம்பர் 9 ஆம் தேதி விஜய் டிவியின் இரண்டு நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவர், விடியற்காலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடைசியாக அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். விஜே சித்ராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், விஜய் டிவி தற்போது சித்ராவின் கடைசி நிகழ்ச்சியின் விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்டார்ட் மியூசிக் விளம்பரம் சித்ரா கடைசியாக மகிழ்ச்சியாக இருந்த மனநிலையை காட்டுகிறது.
Advertisment
Advertisements
இந்த வீடியோ கிளிப்பை பார்க்கும்போது, அவர் தனது தற்கொலை எண்ணங்களை மறைத்து வைத்திருந்த ஒரு நல்ல நடிகரா அல்லது அந்த நேரத்தில் அவர், அத்தகைய எண்ணத்திற்குள் (தற்கொலை) தள்ளப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"