மறைந்த விஜே சித்ராவின் புகைப்படத்தை நெஞ்சில் குத்திய ரசிகர்… வைரலாகும் வீடியோ
Actress VJ Chitra’s Fan Tattooed Her Pic video goes viral Tamil News: மறைந்த நடிகை சித்ராவின் புகைப்படத்தை அவரது தீவிர ரசிகர் ஒருவர் மார்பில் டாட்டுவாக குத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Actress VJ Chitra’s Fan Tattooed Her Pic video goes viral Tamil News: மறைந்த நடிகை சித்ராவின் புகைப்படத்தை அவரது தீவிர ரசிகர் ஒருவர் மார்பில் டாட்டுவாக குத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
VJ Chitra Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சித்ரா. சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகிய இவர், 'சின்ன பாப்பா பெரிய பாப்பா', 'சரவணன் மீனாட்சி' போன்ற சீரியலில் நடித்தார். இவர் தொடர்ந்து நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இவரை பட்டிதொட்டியெல்லாம் மேலும் பிரபலமடையச் செய்தது.
Advertisment
இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ராவுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்தது. அவர் எது செய்தாலும் ட்ரெண்ட்ங், வைரல் தான். முல்லையாக வாழந்த அவருக்கு மக்களும் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
Advertisment
Advertisements
இதற்கிடையில், நடிகை சித்ராவுக்கு, ஹேம்நாத் என்பவருடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. மிகப்பிரமாண்டமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகை சித்ராவுக்கு, நிச்சயதார்த்தம் ஆகி 3 மாதங்களே ஆனா நிலையில், அவர் டிசம்பர் 9ம் தேதி தனியார் ஹோட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் பலரது தலையில் பேரிடியாக விழுந்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டாலும், அவரது தற்கொலை இன்றுவரை ஒரு மர்மாகத் தான் இருக்கிறது.
இந்நிலையில், நடிகை சித்ரா உயிரிழந்து கடந்த டிசம்பர் 9 ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதனையடுத்து, அவரது ரசிகர்களும் பிரபலங்களும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில் தான், மறைந்த நடிகை சித்ராவின் தீவிர ரசிகர் ஒருவர் அவரது நிச்சயதார்த்த புகைப்படத்தை தனது மார்பில் டாட்டுவாக குத்தியுள்ளார். இந்த வீடியோ நடிகை சித்ராவின் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.