பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான வி.ஜே தீபிகா, பரியேறும் பெருமாள் படத்தில் கயல் ஆனந்தி தோழியாக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகத் தொடங்கி, சென்னைக்கு வந்து சீரியல் நடிகையாக வளர்ந்தது வரை தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். சென்னையில் ஆரம்ப காலத்தில் படித்துக்கொண்டே நடிக்க வாய்ப்பு தேடியதையும் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த பிறகு தனது வாழ்க்கை மாறியதையும் வி.ஜே தீபிகா பகிர்ந்துகொண்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் நடிகை வி.ஜே. தீபிகா மிகவும் உணர்ச்சிப் பூர்வமாக தனது கரியரில் பட்ட கஷ்டங்களையும் அவமானங்களையும் வெற்றிகளையும் பகிர்ந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவும் சின்னத்திரையும் எவ்வளவோ மாற்றங்களைச் சந்தித்து முன்னேறியுள்ளது என்றாலும் இன்னும் சில விஷயங்கள் முழுவதுமாக மாறிவிடவில்லை. திறமை இருந்தாலும், நிறம், தோற்றம் போன்றவற்றை வைத்து தேர்வு செய்வது என்பது இருந்துதான் வருகிறது. இதையெல்லாம் உடைத்து சிலர் மட்டுமே முயற்சி செய்கிறார்கள்.
அந்த வகையில், பல தடைகளைத் தாண்டி சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் வி.ஜே தீபிகா. இவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். திருநெல்வேலி பக்கத்திலே அவருடைய கிராமம் இருப்பதால் திருநெல்வேலியிலேயே கல்லூரி படித்திருக்கிறார்.
அந்த நேரத்தில் தான், திருநெல்வேலியில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் சூட்டிங் நடைபெற்று இருக்கிறது. அப்போது கயல் ஆனந்தியின் தோழியாக அவர் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் கதாபாத்திரத்தில் வி.ஜே தீபிகாவிற்கு கிடைத்திருக்கிறது. கயல் ஆனந்திக்கு தோழியாக துணை நடிகையாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த தீபிகாவுக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. ஆனால், நடிக்கப் போகிறேன் என்று வீட்டில் சொன்னால் விட மாட்டார்கள் என்று மேற்படிப்பு படிக்க சென்னைக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு சென்னையில் கல்லூரி படித்துக் கொண்டே பகுதி நேர வேலையாக தொகுப்பாளராகவும், நடிகையாகவும் வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார்.
வி.ஜே தீபிகா தென் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இருந்து வந்ததால், உடை மற்றும் பேச்சு வழக்கில் இவருக்கு சரியாக தெளிவு இல்லாததால் பல இடங்களில் நிராகரித்து இருக்கிறார்கள்.
கல்லூரி படிக்கும்போது, போது எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கும்போது இவருக்கு காலையில் எப்படியாவது 3 இட்லி வாங்கி சாப்பிட வேண்டும் என்று ஆசை ஆனால் முடியவில்லை. அந்த அளவுக்கு தீபிகா சாப்பாட்டுகே கஷ்டப் பட்டிருக்கிறார். விடுதியில் தங்கி படித்த தீபிகா, கல்லூரியில் காலை ஷிப்ட் என்பதால் காலை நேரத்தில் ஹாஸ்டலில் சாப்பிட முடியாதாம். ஆனாலும், தனக்குள் இருக்கும் ஆசை கனவை வெளியே சொல்லாமல் சிரித்தபடியே தோழிகளோடு ஜாலியாக இருந்திருக்கிறார். தீபிகா நடிக்க வாய்ப்பு கேட்டு ஆடிஷன் போகும்போதெல்லாம், தன்னுடைய தோழிகளிடம் டிரஸ் கடன் வாங்கி அணிந்து சென்றுள்ளார்.
ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பிறகு வி.ஜே தீபிகாவின் வாழ்க்கை அப்படியே மாறிவிட்டது. ஆரம்பத்தில் ஒரு சில சீரியல்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். வருமானம் மிகவும் குறைவு என்பதால் வாடகைக்கூட கொடுக்க முடியாமல் கஷ்டப் பட்டிருக்கிறார்.
சென்னையில் பல நாட்கள் சாப்பிடாமல் தவித்த தீபிகா இன்று அவருக்கு என ஒரு வருமானம் வந்து கொண்டிருப்பதால் நான் விதவிதமாக சாப்பாடு வாங்கி சாப்பிடுவதாகத் தெரிவித்துள்ளார். 3 இட்லிக்கு ஏங்கி போய் இருந்த நான் இன்று எவ்வளவு விலை இருந்தாலும் சாப்பாடு வாங்கி ருசி பார்த்து விட வேண்டும் என்று விதவிதமான சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் எனக்கு முகப்பரு வந்ததால் என்னால் தொடர்ச்சியாக நடிக்க முடியாமல் போய்விட்டது. அந்த நேரத்தில் சீரியல் தரப்பினர் எனக்கு எவ்வளவோ சப்போர்ட் பண்ணினார்கள். ஆனால் என்னைப் பற்றி ட்ரோல்ஸ்கள் அதிகமாக வந்ததால் சீரியலில் இருந்து விலக வேண்டிய நிலைமை வந்தது. ஆனாலும் எனக்கு முகப்பரு வந்த விஷயத்தால் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி எனக்கு youtube மூலமாக நல்ல வருமானம் கிடைக்க ஆரம்பித்தது. அதனாலயே நான் எல்லா கடனையும் அடைத்து விட்டேன் என்று வி.ஜே தீபிகா உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.