VJ Maheswari talks about second marriage: பிரபல தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகையுமான மகேஸ்வரி சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் திட்டம் குறித்து பேசியுள்ளார்.
வி.ஜே.வாக பிரபலமானவர் மகேஸ்வரி. இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, சன் மியூசிக் மற்றும் இசை அருவி உள்ளிட்ட தமிழ் இசை சேனல்களில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் சில சீரியல்களிலும் மகேஸ்வரி நடித்துள்ளார். சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தாயுமானவன் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் மகேஸ்வரி, சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கேசவ் என்ற மகன் உள்ளார். இந்தநிலையில், மகேஸ்வரி கடந்த 2010-ம் ஆண்டு தனது கணவர் சாணக்கியனை விவாகரத்து செய்துவிட்டு, தற்போது சென்னையில் தனது பெற்றோர் மற்றும் மகன் கேசவ்வுடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் ஒரு பேட்டியில் மகேஸ்வரி, தனது முன்னாள் கணவர் சாணக்கியனிடமிருந்து விவாகரத்து பெற்று கடந்த 10 ஆண்டுகளாக தனது மகன் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறேன். அவர் தனது சொந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி தனது வாழ்க்கையை வாழ்கிறார். நான் 10 வருடங்களுக்கும் மேலாக தனிமையில் இருக்கிறேன். பல சமயங்களில், நம் வாழ்வோடு போராடுகிறோம். திருமணமாகி ஒரு வருடத்தில் விவாகரத்து பெற்ற நான் குழந்தையை பொறுப்புடன் வளர்ப்பதில் மட்டும் கவனமாக இருந்தேன். இரண்டாவது திருமணம் பற்றி எனக்கு மிகவும் பயம். எனது அடுத்த கணவரும் எனது முன்னாள் கணவரைப் போல் ஆகிவிடுவார்களோ என்ற பயம், திருமணம் நீண்ட காலம் நீடிக்காது. திருமணத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் இந்த பயம் என்னைத் தடுத்து நிறுத்துகிறது, என்று கூறினார்.
மேலும், விவாகரத்துக்குப் பிறகு யாருடனும் உறவில் இல்லை என்று தெளிப்படுத்தியுள்ள மகேஸ்வரி, தற்போது திருமணம் செய்யும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.