’திருமணத்தை விமர்சித்த ரசிகர்’: தக்க பதிலடி கொடுத்த விஜே மணிமேகலை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
VJ Manimegalai Reply for marriage controversy

VJ Manimegalai Reply for marriage controversy

VJ Manimegalai: வி.ஜே. மணிமேகலை அவரது தொகுப்பற்றலுக்காக பலரின் ஃபேவரிட்டாகியிருக்கிறார். பக்கத்து வீட்டுப் பெண் போன்ற குணாதிசயங்களைக் கொண்ட அவர், பூட்டுதலில் தனது கணவர் உசேனுடன் கிராமத்தில் நேரத்தை செலவிட்டார். அங்கிருந்து சில வீடியோக்களையும், படங்களையும் பகிர்ந்துக் கொண்டார். ரம்ஜான் தினத்தன்று, முஸ்லீம் ஆடையில் கணவருடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, ’ஈத் முபாரக், முன்னாடி எல்லாம் நான் தான் ஃப்ரெண்ட்ஸ் எல்லார் கிட்டயும் ரம்ஜான் பிரியாணி கேப்பேன். இப்போ எல்லாரும் என்கிட்ட கேக்குறாங்க. ஒரே நகைச்சுவையா இருக்கு போ’ என்று தலைப்பிட்டிருந்தார்.

Advertisment
25, 2020

Advertisment
Advertisements

இந்த பதிவுக்கு மணிமேகலையின் ட்விட்டர் ஃபாலோயர் ஒருவர், “எப்படியோ ஒரு வழியாக மதம் மாற்றி விட்டான். இதற்கு பெயர் தான் லவ் ஜிகாத்” என்று மரியாதை இல்லாமல் கூறியிருந்தார். அதற்கு, ”ஹேப்பி ரம்ஜான் சொல்றதுக்கு எல்லாம் மதம் மாறிட்டு தான் சொல்லணுமா? யாரும் இங்க கன்வெர்ட் ஆகல. உசேன் என்னுடன் கோவிலுக்கு வருகிறார், நாங்கள் ரம்ஜானையும் கொண்டாடுகிறோம். நாங்கள் இருவரும் தெளிவாக இருக்கிறோம். உங்கள் குழப்பங்களை இங்க கொண்டு வராதீங்க ப்ளீஸ்.  நன்றி” என்று பதிலடி கொடுத்திருக்கிறார் மணிமேகலை.

25, 2020

2010 ஆம் ஆண்டில் தனது ஆங்கர் பணியை தொடங்கிய மணிமேகலை சமீபத்திய 'கலக்கப்போவது யாரு' மற்றும் 'குக் வித் கோமாளி' உள்ளிட்ட பல வெற்றிகரமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், குடும்பத்தை எதிர்த்து 2017-ம் ஆண்டு உசேனை பதிவு திருமணம் செய்துக் கொண்டார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Vj Manimegalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: