/tamil-ie/media/media_files/uploads/2020/05/New-Project-2020-05-19T193530.528.jpg)
vj manimegalai challenged to Pugazh, cook with comali, vijay tv, vijay tv celebrity vj manimegalai, விஜே மணிமேகலை, புகழ், மணிமேகலை டீ சர்ட் சவால், வைரல் வீடியோ, குக் வித் கோமாளி புகழ், viral video, pugazh t shirt challenge viral video, vijay tv programme news, cook with comali pugazh, tamil viral video news, tamil video news, tamil viral news, manimegalai t shirt challenge
Tamil Viral Video News: விஜய் டிவியின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான புகழுக்கு விஜே மணிமேகலை விடுத்த வித்தியாசமான டீ சர்ட் சவாலை ஏற்று செய்ய முயன்றபோது தடுமாறிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி அண்மையில் முடிவடைந்தது. சமையல் செய்வதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி வழக்கம்போல சமையல் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வதாக இருக்காமல் சமையல் தெரிந்தவரும் சமையல் தெரியாதவரும் அவர்களுடன் விஜய் டிவி கலக்கப்போவது யாரு நகைச்சுவை நடிகர்கள் இணைந்து உருவாக்கப்பட்டதுதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடிகர் புகழ், விஜே மணிமேகலைக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாக காணமானது.
கடலூரைச் சேர்ந்த புகழ், பள்ளிப் படிப்புடன் சென்னைக்கு வேலை தேடி வந்தார். பின்னர், சென்னையில் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு, ஒரு வழியாக விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு அறிமுகமானார். இதையடுத்து, விஜய் டிவியிலேயே, அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு பகுதியில் நடித்து வந்தார்.
இதற்கு அடுத்துதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் புகழுக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தனது இயல்பான நகைச்சுவை பெர்ஃபார்மன்ஸ் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
அதே போல, சன் மியூஸிக்கில் பிரபலமாகி விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழின் உச்சிக்கு சென்றவர் விஜே மணிமேகலை.
டிவி நடிகர்கள் நடிகைகள் அனைவரும் இந்த பொது முடக்க காலத்தில் பல்வேறு வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். சிலர் உடற்பயிற்சி வீடியோக்களையும் வித்தியாசமான சவால்களையும் விடுத்து வருகின்றனர்.
அந்த வரிசையில், விஜே மணிமேகலை, புகழுக்கு தலை கீழாக நின்று டீ சர்ட் அணிய வேண்டும் என்று ஒரு சவாலை விடுத்தார்.
மணிமேகலையின் சவாலை ஏற்றுக்கொண்ட புகழ், தலைகீழாக நிற்க முயன்று தடுமாறி விழுந்தார். ஒருவழியாக தலைகீழாக நின்று இரு கைகளையும் டீ சர்ட்டுக்குள் நுழைத்த பின், தலையை உள்ளே நுழைக்கும்போது தடுமாறி கீழே விழுந்தார். இந்த வீடியோ வடிவேலு வசனங்களுடன் எடிட் செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் மணிமேகலை இதுவா விளையாட்டு என்று நகைச்சுவையாக கேட்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.