அழகிப்போட்டியில் விஜே.மணிமேகலை : தாறுமாறாக கலாய்த்த கணவர் ஹூசைன்

VJ Manimegalai Old Photo : விஜே மணிமேகலையின் பழைய புகைப்படத்தை அவரது கணவரே தாறுமாறாக கலாயத்துள்ளார்

சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக தனது சின்னத்திரை பயணத்தை தொடக்கியவர் மணிமேகலை. அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வளர்ந்த இவர், பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவருக்கென்று தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில். ஹூசைன் என்பரை காதலித்து வந்த இவர், பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின்னும் சின்னத்திரை பணிகளை தொடர்ந்து வரும் மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர்  மிர்சஸ் சின்னத்திரை ‘ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மேலும், குக்வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2-வில் பங்கேற்ற இவர் கோமாளியாக வலம் வந்தார். மணிமேகலை மற்றும் ஹுசைன் இருவரும் சமூக வளைதளத்தில் ஒருவரை ஒருவர் இருவரும் வழக்கம்.

இந்நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு மணிமேகலை அழகி போட்டியில் கலந்துகொண்ட புகைப்படம் ஒன்றை ரசிகர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை பகிர்ந்துள்ள மனிமேகலையின் கணவர் ஹுசைன், ப்பா, யார்ரா இந்த பொண்ணு எவ்ளோ மேக்கப் போட்டு என்று கலாய்த்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vj manimegalai husband hussian troll to his wife old photos

Next Story
Vijay TV Serial : பாக்யாவிற்கு மகிழ்ச்சியான தகவல் சொன்ன ராதிகா… கடும் அப்செட்டில் கோபி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com