/tamil-ie/media/media_files/uploads/2021/07/manimegalai-4.jpg)
தமிழக மக்கள் மத்தியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு கிடைத்த வரவேற்பை அறிந்து பல டிவி சேனல்கள் ரியாலிட்டி நிகழ்சிகளை நடத்துவதில் கவனம் செலுதி புதிய புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
டிவி என்றாலே தமிழ் மக்களுக்கு சீரியல்கள் என்று நினைக்கும் அளவுக்கு தமிழ் டிவி சேனல்களில் சீரியல்களின் ஆதிக்கம் இருண்டு வருகிறது. தமிழக தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனால், பல முன்னணி தொலைக்காட்சிகள் புதுப்புது ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்த தொடங்கியுள்ளன.
அதிலும் விஜய் டிவி சீரியல்களுக்கு நிகராக ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அப்படி விஜய் டிவியில் பெரிய அளவில் ஹிட் அடித்த ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரட்சிகர்கள் இடையே கிடைத்த பெரிய வரவேற்பைப் பார்த்த விஜய் டிவி குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியை நடத்தியது. அதற்கும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்தது. அதனால், 3வது சீசனை தொடங்கும் திட்டத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமையல் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கும் பிரபலங்கள் உடன் கோமாளிகளாக நகைச்சுவை கலைஞர்கள் செய்த நகைச்சுவை அட்டகாசங்கள் ரசிகர்களுக்கு ஒரு செமையான பொழுது போக்காக அமைந்து மகிழ்வித்தது. குக் வித் கோமாளி இரண்டு சீசனிலும் பல்வேரு கோமாளிகள், புகழ், பாலா, ஷிவாங்கி, தங்கதுரை என பலர் கலந்துகொண்டனர். அதில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவராகவும் பரிச்சயமானவராகவும் இருந்தவர்களில் ஒருவர் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை. மணிமேகலை முதலில் தனது தொகுப்பாளினி பயணத்தை சன் டிவியில் தொடங்கினார். தனது குறும்பான அழகான குரலால் மணிமேகலை பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர். தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மணிமேகலைக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
விஜே மணிமேகலை நடன இயக்குனர் உசேனை காதலித்துதிருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தொகுப்பாளினி பணியில் இருந்து சிறிது ஓய்வெடுத்த மணிமேகலை மீண்டும் டிவி நிகழ்ச்சிகளில் வந்தார். ஆனால், அவருக்கு தொகுப்பாளினியாக பணிபுரியும் வாய்ப்பு அமையவில்லை.
இந்த சூழலில்தான், மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார். அப்போதுகூட அவர் தன்னை தொகுப்பாளினியாக போட வேண்டும் என்று கூறிவந்தார்.
அண்மையில் விஜய் டிவியில் புதியதாக தொடங்கப்பட்ட மிஸ்சஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் அர்ச்சனா தொகுப்பாளினியாக இருந்தார். அப்போது, ரசிகர்கள் பலரும் மணிமேகலைக்கு தொகுப்பாளினி வாய்ப்பு அளிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில்தான்,‘சிங்கிள் பொண்ணுங்க’ நிகழ்ச்சியில் ம க பாவுடன் இணைந்து தொகுப்பாளினியாக பணிபுரியும் மணிமேகலை தெறி பேபி என்ற புதிய நிகழ்ச்சியில் ரக்ஷனுடன் இணைந்து தொகுத்து வழங்க உள்ளார். மணிமேகலை குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்தே ரக்ஷனுடன் இணைந்து தொகுப்பாளினியாக பணி புரிய வேண்டும் என்று கூறிவந்தார். தற்போது, அவர் விருப்பப்பட்டது போலவே, தெறி பேபியில் ரஷனுடன் கூட்டணி அமைத்து தனது ஆங்கரிங்கை தொடங்க உள்ளார்.
அதனால், விஜே மணிமேகலை தான் நினைத்தது மாதிரியே கூட்டணி அமைத்து தெறி பேபி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக கலக்கப் போகிறார் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.