பிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான ஹுசைனை திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரியும். இருவரும் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றனர்.


காதலிக்கத் தொடங்கிய பின்னர் இருவரும் தங்களது காதலை வீட்டில் தெரிவித்து திருமணம் செய்வதாக கூறி இருந்தார்கள். ஆனால் ஹுசைன் வேறு மதம் என்பதால் மணிமேகலை வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை எதிர்த்து பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின்னர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தாலும் பெற்றோர்கள் துணை இல்லாமல் மிகவும் வாழ்வில் கஷ்டப்படுவதாக மணிமேகலை பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

/tamil-ie/media/media_files/uploads/2020/01/a1048-300x171.jpg)
அதில், “இப்போது நாங்கள் எங்களது வீட்டில் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் எதிர்பார்த்தபடி ஒரு நல்ல நிலைமைக்கு நாங்கள் இன்னும் செல்லவில்லை. எங்களுடைய இலக்கை அடைந்த பின்னர் அவர்களிடம் நிச்சயம் பேச முயல்வோம். இப்போது நாங்கள் பேசினால் நாங்கள் அவர்களிடம் ஏதாவது எதிர்பார்க்கிறோம் என்று அவர்கள் தவறாக நினைக்க வாய்ப்புண்டு. பாசம் இல்லாமல் ஒன்றும் இல்லை, பேசவேண்டும் என்ற ஆசைகூட இருக்கிறது. நல்ல நிலைமைக்கு வந்ததும் கண்டிப்பாக பேச முயற்சி செய்வோம்.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/a1049-300x300.jpg)
ஆனால், வாழ்க்கை எனும் அழகான பாதையில் இருவரும் தற்போது வெற்றி நடைபோட்டு வருகின்றனர். மணிமேகலை மற்றும் ஹுசைன் தம்பதியினர் புதிதாக ஒரு கேடிஎம் 200 சிசி பைக்கை சமீபத்தில் வாங்கியுள்ளனர். இதன் விலை 2 லட்சமாம்.
data-instgrm-version="12">
/tamil-ie/media/media_files/uploads/2020/01/a1050-300x278.jpg)
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்ஸ்டாவில் மணிமேகலை வெளியிட்டுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/a1051-300x280.jpg)
மணிமேகலை இன் என்ஜாய் மோட்!!