Advertisment

விஜய் டி.வி நிகழ்ச்சிக்கு 'பை': வி.ஜே மணிமேகலை வீட்டுல விசேஷம்?

விஜே மணிமேகலை விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
VJ Manimegalai

வி.ஜே. மணிமேகலை

தொகுப்பாளினியும் குக் வித் கோமாளி பிரபலமான விஜே மணிமேகலை இனிமேல் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு வரமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் கர்ப்பமாக உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.  

Advertisment

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளில் ஒருவர் விஜே மணிமேகலை. விஜய் டிவியின் ஹிட் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், தற்போது ரியாலிட்டி ஷோ, யூடியூப் என பிஸியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற இவர், சமீபத்திய சீசனில் குக்காக பங்கேற்று சமையல் செய்யும்போது குக்கர் வெடித்த வீடியோ பெரும் வைரலாக பரவியது. இதனிடையே தற்போது விஜே மணிமேகலை விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அவர் வெளியிட்ட பிறந்த நாள் வீடியோ அதன்பிறகு அவர் வெளியிட்ட பதிவுகள் அனைத்துமே மணிமேகலை வெயிட் போட்ட மாதிரியான தோற்றத்தை உருவாக்கியது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இது கண்டிப்பாக கர்ப்பமாக இருப்பதற்காக அறிகுறியாகத்தான் இருக்கும் என்று கூறி வருகின்றனர். அதேபோல் அவர் அணிந்திருக்கும் உடை அனைத்துமே ரொம்ப ப்ரியாக உள்ளது.

இதன் மூலம் கண்டிப்பாக அவர் கர்ப்பமாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறி வருகின்றனர். ஆனால் இது குறித்து மணிமேகலை தரப்பில் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. கர்ப்பமாக இருக்கும் போது ஓய்வு தேவை என்பதால் தான் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்தே விலகியதாக கூறப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Vj Manimegalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment