கார் காதலி வி.ஜே மணிமேகலை: 2 மாதத்தில் வாங்கிய 2-வது கார்!

Sun TV and Vijay Tv fame VJ Manimegalai buys her 2nd car insta video goes viral Tamil News: கடந்த செப்டம்பர் மாதத்தில் பிஎம்டபிள்யூ (BMW) கார் வாங்கிய மணிமேலை, தற்போது இரண்டே மாதத்தில் 2வது கார் வாங்கியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VJ Manimegalai Tamil News: hussain VJ Manimegalai couple buys their 2nd car in a year

VJ Manimegalai Tamil News: சன் மியூசிக் சேனலில் VJ-வாக அறிமுகமாகி பட்டிதொட்டியெல்லாம் பாப்புலர் ஆனவர் விஜே மணிமேகலை. தனது படபடப்பு மற்றும் கலகலப்பான பேச்சின் மூலம் தனக்கென தனி ரசிகர்களை பெற்ற இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு திரையுலகின் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளையும் பேட்டி கண்டும் அசத்தி இருக்கிறார். சன் நெட்வொர்க்கில் கிட்டத்தட்ட10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, கடந்த 2019-ல் பிரபல முன்னணி சேனல்களில் ஒன்றான விஜய் டிவிக்கு மாறினார்.

விஜய் டிவி-யில் முதலில் சில நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்ட மணிமேகலை, பின்னர் ஷோக்களை தொகுத்து வழங்க துவங்கினார். சமீபத்தில் முடிவடைந்த ‘குக் வித் கோமாளி’ ஷோவில் கோமாளியாகவும் பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆனா நிலையில், மணிமேகலை மேலும் பிரபலமடைந்தார்.

தற்போது விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் விஜே மணிமேகலை கடந்த 2017ம் ஆண்டு உதவி நடன இயக்குனரான ஹுசைனை திருமணம் செய்துகொண்டார். ஹுசைனை அவர் ஏற்கனவே காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அவரை கரம் பிடித்தார்.

சமூக வலைத்தளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை தனது காதல் கணவர் ஹுசைனுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதம் மணிமேகலை – ஹுசைன் ஜோடி BMW சொகுசு கார் ஒன்றை வாங்கினர். இதனை மணிமேகலை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்போது மணிமேகலை – ஹுசைன் ஜோடி மற்றொரு புதிய காரை வாங்கியுள்ளார்கள். இது குறித்த வீடியோ ஒன்றை மணிமேகலை தனது இன்ஸ்டா ரீலில் ஷேர் செய்துள்ளார். இதற்கும் அவரது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vj manimegalai tamil news hussain vj manimegalai couple buys their 2nd car in a year

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express