scorecardresearch

பள்ளி மாணவியா எப்படி இருக்கார் பாருங்க… இந்த விஜய் டிவி பிரபலத்தை தெரிகிறதா?

Cooku with Comali show fame VJ Manimegalai’s school days photo goes viral Tamil News: ‘குக் வித் கோமாளி’ புகழ் மணிமேகலை தனது பள்ளி பருவ புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகிறது.

VJ Manimegalai Tamil News: Manimegalai’s school days pic goes viral

VJ Manimegalai Tamil News: சன் மியூசிக்கில் விஜேவாக அறிமுகமாகி பட்டிதொட்டியெல்லாம் பாப்புலர் ஆனவர் விஜே மணிமேகலை. தனது படபடப்பு மற்றும் கலகலப்பான பேச்சின் மூலம் தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கியுள்ள இவர் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு திரையுலகின் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளையும் பேட்டி கண்டும் உள்ளார்.

சன் நெட்வொர்க்கில் கிட்டத்தட்ட10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, கடந்த 2019-ல் தமிழில் முன்னணி சேனல்களில் ஒன்றான விஜய் டிவிக்கு மாறினார் மணிமேகலை. இங்கு முதலில் சில நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்ட அவர், பின்னர் ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார்.

மணிமேகலையின் சின்னத்திரை வாழ்க்கையில் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது ‘குக் வித் கோமாளி’ ஷோ தான் என்றால் நிச்சயம் மிகையாகாது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி உலகப்புகழ் பெற்ற இந்த ஷோவில் கோமாளியாக தோன்றி காமெடியில் கலக்கி இருந்தார். இதனால், ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்த இவர், தற்போது தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

மணிமேகலை கடந்த 2017ம் ஆண்டு உதவி நடன இயக்குனரான ஹுசைனை திருமணம் செய்துகொண்டார். ஹுசைனை அவர் ஏற்கனவே காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அவரை கரம் பிடித்தார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். மேலும், மணிமேகலை தனது காதல் கணவர் ஹுசைனுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பள்ளி பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். லைக்ஸ்களை குவித்து வரும் அந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vj manimegalai tamil news manimegalais school days pic goes viral