அடுத்தடுத்து கார் வாங்கிய மணிமேகலை: ஒரு நிகழ்ச்சிக்கு பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
SUN and Vijay fame VJ Manimegalai Salary Tamil News: விஜே மணிமேகலை அடுத்தடுத்து 2 கார்களை வாங்கியுள்ள நிலையில், அவரின் சம்பளம் தான் எவ்வளவு? என்பதை நெட்டிசன்கள் தேட ஆரம்பித்துள்ளனர்.
VJ Manimegalai Tamil News: சன் மியூசிக் சேனலில் விஜேவாக அறிமுகமாகி பட்டிதொட்டியெல்லாம் பாப்புலர் ஆனவர் விஜே மணிமேகலை. தனது படபடப்பு மற்றும் கலகலப்பான பேச்சின் மூலம் தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி இருக்கும் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு திரையுலகின் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளையும் பேட்டி கண்டும் அசத்தியுள்ளார்.
Advertisment
சன் நெட்வொர்க்கில் கிட்டத்தட்ட10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, கடந்த 2019-ல் முன்னணி சேனல்களில் ஒன்றான விஜய் டிவிக்கு மாறினார். இங்கு முதலில் சில நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்ட மணிமேகலை, பின்னர் ஷோக்களை தொகுத்து வழங்க துவங்கியுள்ளார்.
Advertisment
Advertisements
மணிமேகலையின் சின்னத்திரை வாழ்க்கையில் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது ‘குக் வித் கோமாளி’ ஷோ தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய இந்த ஷோவில் கோமாளியாக வந்த இவர் காமெடியில் கலக்கி இருந்தார். இதனால், இவர் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார்.
மணிமேகலை கடந்த 2017ம் ஆண்டு உதவி நடன இயக்குனரான ஹுசைனை திருமணம் செய்துகொண்டார். ஹுசைனை அவர் ஏற்கனவே காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அவரை கரம் பிடித்தார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். மேலும், மணிமேகலை தனது காதல் கணவர் ஹுசைனுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் BMW சொகுசு கார் ஒன்றை வாங்கிய புகைப்படத்தை பகிர்ந்தார். அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில், கடந்த மாதத்தில் மற்றொரு புதிய காரை வாங்கினர். அந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணைய மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாகவே அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.
தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரியும் மணிமேகலை, அவரின் சம்பளம் இவ்வளவுதான் என்பதை இதுவரை வெளிப்படுத்தியது இல்லை. ஆனால், அவர் அடுத்தடுத்து 2 கார்களை வாங்கியுள்ள நிலையில் அவரின் சம்பளம் தான் எவ்வளவு என்பதை நெட்டிசன்கள் தேட ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், மணிமேகலை ஒரு நிகழ்ச்சியில் ஒரு எபிசோடைத் தொகுத்து வழங்குவதற்காக சுமார் 60,000 ரூபாய் வாங்குகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“