சாத்தான்குளத்தில் தந்தை மகன் போலீசாரின் சித்திரவதையால் பலியான சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சத்தியமா விடவே கூடாது என்று ட்வீட் செய்ததை பிரபல டிவி தொகுப்பாளினி கேள்வி கேட்டு பதிவிட்டதற்கு ரஜினி ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து தங்கள் ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தந்தை மகன் இருவரும் சாத்தான்குளம் போலீஸ் சித்திரவதையால் இறந்தனர் என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை போனில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார். பல தரப்பிலும் அழுத்தம் அதிகரித்த நிலையில், இந்த வழக்கை தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அச்சுறுத்தலுக்கு ஆளானதாக அறிகை அளித்தார். பெண் தலைமைக் காவலர் ரேவதி அன்று நடந்த சம்பவங்களை மிகவும் பயத்துடன் சாட்சியம் அளித்ததாக மாஜிஸ்திரேட் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தந்தை மகன் போலீஸ் சித்திரவதையில் இறந்ததாக கூறி கொலைவழக்காக பதிவு செய்யப்பட்டது. பின்னர், தந்தை மகன் மரணத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாத்தான்குளம் தந்தை மகன் போலீஸ் சித்திரவதையில் இறந்த சம்பவம் இந்திய அளவிலும் ஏன் உலக அளவிலும் போலீஸ் சித்திரவதை மரணங்களை விவாதமாக்கியது.
#சத்தியமா_விடவே_கூடாது pic.twitter.com/MLwTKg1x4a
— Rajinikanth (@rajinikanth) July 1, 2020
இந்த நிலையில், தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் நடந்து 12 நாட்களுக்குப் பிறகு, நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், “தந்தையையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்துகொண்ட முறையும் பேசிய பேச்சு அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது. #சத்தியமா_விடவே_கூடாது” என்று ஹேஷ்டேக் பதிவிட்டார்.
இதனை அடுத்து, டுவிட்டரில் ரஜினி தெரிவித்த ‘#சத்தியமா_விடவே_கூடாது’ என்ற வார்த்தைகள் ட்ரெண்டிங் ஆனது.
" மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் "
சரி ஒகே... அப்போ அந்த ரெண்டு SI ?? அதையும் கொஞ்சம் தெளிவா குறிப்பிட்டு சொல்லலாமே.. யாருக்கு தண்டனை ? எதுக்கு இந்த மேலோட்டமான பேச்சு .. ?? #சத்தியமா_விட_கூடாது https://t.co/hYGIr6o7HN
— VJ Parvathy (@parvathy_saran) July 1, 2020
இதனைத் தொடர்ந்து தொகுப்பாளினி விஜே பார்வதி, சாத்தான்குளம் சம்பவம் பற்றி ரஜினி டுவிட் செய்ததைப் பற்றி கேள்வி எழுப்பி டுவிட் செய்துள்ளார். அதில், “மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்” சரி ஒகே... அப்போ அந்த ரெண்டு SI ?? அதையும் கொஞ்சம் தெளிவா குறிப்பிட்டு சொல்லலாமே.. யாருக்கு தண்டனை ? எதுக்கு இந்த மேலோட்டமான பேச்சு .. ??” என்று பதிவிட்டார்.
ரஜினியின் கருத்து பற்றி கேள்வி எழுப்பிய விஜே பார்வதியின் டுவிட்டர் பதிவைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து தங்கள் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
பார்வதியின் பதிவுக்கு பதிலளித்துள்ள ஒரு ரஜினி ரசிகர், “பார்வதியின் பதிவைப் பார்த்த நெட்டிசன் ஒருவர் “நிஜமாலே...பார்வதி அகவுண்ட் தானா..” என்று கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள விஜே பார்வதி, “நான் முதலில் ஒரு இதழியல் மாணவி. அதற்கு அப்புறம்தான் இந்த பொழுதுபோக்கு எல்லாம். எனக்கு என்ன செய்கிறேன் என்று தெரியும் பிரதர்” என்று தெரிவித்துள்ளார்.
பார்வதியின் கேள்விக்கு பதிலளித்துள்ள ரஜினி ரசிகர் ஒருவர், “உண்மையா நீங்க ஜர்னலிஸம் படிக்கிற மாணவியா? ஏன் கேக்குறானா, அவர் தமிழ்ல போட்ட ட்வீட்டே உங்களுக்கு புரியலையே. யாரையாவது விட்ருங்கன்னு சொன்னாரா? சம்பத்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படணும் அப்டினு சொல்லிட்டாரு. இதுல உங்களுக்கு எல்லாருடைய பெயரையும் சொல்லணுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு ரசிகர், “விட்டா ரஜினி ஏன் தீர்ப்பு கொடுத்து தண்டனை கொடுக்காம விட்டாருனு கேப்பாங்க போல” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பல ரஜினி ரசிகர்கள், குறிப்பிட முடியாத அளவுக்கு மிகவும் ஆபாசமாக பார்வதியை விமர்சித்து குறிப்பிட்டுள்ளனர். ரஜினியின் கருத்தை விமர்சித்ததற்காக பார்வதியை விமசித்து ரஜினி ரசிகர்கள் தங்கள் ஆத்திரத்தையெல்லாம் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
பார்வதியின் பதிவைப் பார்த்த நெட்டிசன் ஒருவர் “நிஜமாலே...பார்வதி அகவுண்ட் தானா..” என்று கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள விஜே பார்வதி, “நான் முதலில் ஒரு இதழியல் மாணவி. அதற்கு அப்புறம்தான் இந்த பொழுதுபோக்கு எல்லாம். எனக்கு என்ன செய்கிறேன் என்று தெரியும் பிரதர்” என்று தெரிவித்துள்ளார்.
பார்வதியின் கேள்விக்கு பதிலளித்துள்ள ரஜினி ரசிகர் ஒருவர், “உண்மையா நீங்க ஜர்னலிஸம் படிக்கிற மாணவியா? ஏன் கேக்குறானா, அவர் தமிழ்ல போட்ட ட்வீட்டே உங்களுக்கு புரியலையே. யாரையாவது விட்ருங்கன்னு சொன்னாரா? சம்பத்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படணும் அப்டினு சொல்லிட்டாரு. இதுல உங்களுக்கு எல்லாருடைய பெயரையும் சொல்லணுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு ரசிகர், “விட்டா ரஜினி ஏன் தீர்ப்பு கொடுத்து தண்டனை கொடுக்காம விட்டாருனு கேப்பாங்க போல” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பல ரஜினி ரசிகர்கள், குறிப்பிட முடியாத அளவுக்கு மிகவும் ஆபாசமாக பார்வதியை விமர்சித்து குறிப்பிட்டுள்ளனர். ரஜினியின் கருத்தை விமர்சித்ததற்காக பார்வதியை விமசித்து ரஜினி ரசிகர்கள் தங்கள் ஆத்திரத்தையெல்லாம் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.