Vj Priyanka Deshpande Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கும் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக தொகுப்பாளினி பிரியங்கா உள்ளார். இந்த சேனலில் ஒளிபரப்பாகும் முன்னணி ஷோக்களை தொகுத்து வழங்கி வரும் இவர், விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டார். வரவேற்புடன் விமர்சனங்களை பெற்ற அவருக்கு, முடிவில் இரண்டாம் இடம் கிடைத்தது.

இதற்கிடையில், பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டில் பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரவீன் குமாரும் விஜய் டிவியின் ஒரு தயாரிப்பு குழுவில் பணியாற்றி வருகிறார். பிக் பாஸ் வீட்டில் 15 வாரங்கள் தாக்குப்பிடித்த பிரியங்கா சுமார் 30 லட்சம் வரை சம்பளம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பிரியங்கா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அந்த வீடியோவில் பிரியங்கா தனது ரசிகர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தார். மேலும், தனக்கு சப்போர்ட் செய்த அனைவருக்கும் நன்றி. தன்னை வெறுத்தவர்களுக்கும் நன்றி. என்னை மன்னித்து விடுங்கள். இதற்குப் பிறகு உங்களுக்கு நல்ல என்டர்டைன்மென்ட் கொடுப்பேன் என்றும் கூறியிருந்தார்.
லைவ்வில் பேசிருந்த ப்ரியங்காவிடம் ரசிகர்கள், ‘பிக்பாஸ் வீட்டில் ஏன் நீங்கள் பிரவீனை பற்றி பேசவில்லை. பிரவீன் எங்கே?’ என்கிற கேள்விகளை தொடுத்தனர். இதற்கு பிரியங்கா, எல்லோரும் பிரவீனை பற்றி கேட்கிறீர்கள். இதற்கான பதிலை நான் அடுத்த பதிவில் சொல்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.


தவிர, பிக் பாஸ்நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் வெளிவந்த வீடியோவிலும் பிரியங்கா பிரவீனை பற்றி கேட்டதற்கு, அவருக்கு கேமரா முன் வருவதற்கு கூச்சம். கேமரா முன்பு அதிகமாக வர மாட்டார் என்றுகூறியிருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, பிரியங்கா நிரூப்புடன் வெளியே சென்றிருந்த புகைப்படங்கள் எல்லாம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால், தன் கணவருடன் எடுத்த ஒரு புகைப்படம் ஒன்றைக் கூட பதிவிடவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“