பிக்பாஸ் வீட்டில் தாமரை சர்ச்சை… அரசியல் கட்சியை விமர்சித்தாரா பிரியங்கா?
Biggboss 5 Tamil: vijay tv fame vj priyanka deshpande quotes political party name in Bigg Boss house tamil news: பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற நாமினேஷனின் போது தாமரை பற்றி பிரியங்கா பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Vj Priyanka Deshpande Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் - 5 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக முன்னணி தொகுப்பாளினி பிரியங்கா இருக்கிறார். அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றது முதல் அனைத்து போட்டியாளர்களுடனும் நல்ல நட்பை ஏற்படுத்தினார். சிலருடன் அதிக நெருக்கம் காண்பித்தார்.
Advertisment
அந்த வகையில், மற்றொரு முக்கிய போட்டியாளரான தாமரை உடன் ஆரம்பத்தில் இருந்தே பிரியங்கா நெருக்கமாக இருந்து வருகிறார். பிக் பாஸ் கேம் மற்றும் டாஸ்க் என பிக் பாஸ் வீட்டில் நிறைய விஷயங்களை தாமரைக்கு சொல்லிக்கொடுத்த வண்ணம் இருக்கிறார். அவ்வப்போது நெருங்கிய தோழிகளாகவும் இவர்கள் வலம் வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தோழிகள் மத்தியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், இருவருக்கும் இடையேயான பிரச்சனை நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணமே இருக்கிறது. இதற்கு முக்கியம் காரணம், தாமரை தலைவர் ஆக தகுதி இல்லை என பிரியங்கா கூறியது தான்.
இந்த நிலையில், நேற்று பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற நாமினேஷனின் போது தாமரை பற்றி பிரியங்கா பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாமினேஷன் போது பிரியங்கா, "தாமரை __ல் இருந்தாலும் தொல்லை, வீட்டில் இருந்தாலும் தொல்லையாக இருக்கு' என்று கூறி தாமரையை நாமினேட் செய்தார்.
பிரியங்கா தாமரையை பற்றி பேசிய அந்த வார்த்தையை பிக்பாஸ் குழு மியூட் போட்டுள்ள நிலையில், அது என்ன வார்த்தை என்பதை நெட்டிசன்கள் தற்போது ஊகித்துள்ளனர். அதில் பிரியங்கா பாஜக-வை தான் அப்படி குறிப்பிட்டுள்ளார் என்றும், இது போன்ற சர்ச்சை எதுவும் வராமல் இருக்கவே இப்படி மியூட் செய்துள்ளனர் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“