Vj Priyanka Deshpande Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கும் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக தொகுப்பாளினி பிரியங்கா உள்ளார். இந்த சேனலில் ஒளிபரப்பாகும் முக்கிய ஷோக்களை தொகுத்து வழங்கி வரும் இவர், விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டார். வரவேற்புடன் விமர்சனங்களை பெற்ற அவருக்கு, முடிவில் இரண்டாம் இடம் கிடைத்தது.

பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பிறகு, தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் மற்றும் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இதில், பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ நேற்று வெளிவந்த நிலையில், வருகிற 6ம் தேதி ஞாயிற்று கிழமை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிலையில், பிரியங்கா “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இருக்கிறார். தற்போது இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.


அந்த ப்ரோமோ வீடியோவில் பிரியங்கா சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கிறார். இதைப்பார்த்த அங்கிருந்த போட்டியாளர்கள் சிலர் கண் கலங்குகின்றனர். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“