விஜய் டிவியில் தான் என் குழந்தை உள்ளது என்னால் விட்டுக்கொடுக்க முடியாது என்று வி.ஜே.பிரியங்கா ஒரு பேட்டியில் கூறியுள்ளது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருக்கும் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் வி.ஜே.பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது அவர் இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விஜய் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இதன் மூலம் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கிக்கொண்டார்.
அதேபோல் தொகுப்பாளராக இல்லாமல், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பிரியங்கா தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில், போட்டியாளராக பங்கேற்று விதவிதமாக சமைத்து அசத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2-வது இடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட பிரியங்கா குக் வித் கோமாளி டைட்டிலை வெல்வார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் இவரின் சமையலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
இதனிடையே சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார்ட் மியூசிக் ஆகிய இரு நிகழ்ச்சிகளில் உங்களுக்கு பிடித்தது எது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இல்லை என்றால் நான் இந்த அளவிற்கு வளர்ந்திருப்பேனா என்று தெரியாது. சூப்பர் சிங்கர் தான் எனக்கு அங்கீகாரம் கொடுத்தது. அதேபோல் ஸ்டார்ட் மியூசிக் என்னுடைய குழந்தை. அதை நல்லபடியாக வளர்த்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது என் ஆசை என்று கூறியுள்ளார்.
கணவரை பிரிந்து வாழும் பிரியங்கா 2-வது திருமணம் செய்ய உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது விஜய் டிவியில் தனது குழந்தை உள்ளது என்று கூறியுள்ளது அவர் குழந்தையை தத்தெடுத்துள்ளாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், கடைசியில் ஸ்டார்ட் மியூசிக் தான் எனது குழந்தை என்று பிரியங்கா கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“