/tamil-ie/media/media_files/uploads/2021/05/rs-ramya-vj.png)
VJ Ramya Turns Emotional in Insta Live : விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்து, சினிமாவுக்குள் தடம் பதித்தவர் வி.ஜே.ரம்யா. சமீபத்தில் வெற்றிமாறன் தயாரிப்ப்பில், சமுத்திரகனி, கருணாஸ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த சங்கத்தலைவன் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து அசத்தி இருந்தார். சங்கத்தலைவன் வெற்றிக்கு பிறகாக, சோஷியல் மீடியாக்களில் செம்ம ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் ரம்யா. தனது ரசிகர்களுடன் நல்ல ரிலேஷன்ஷிப்பில் இருக்க வேண்டும் என்ற நோக்கில், இன்ஸ்டாகிராமில் லைவ் செய்துள்ளார்.
ரம்யா லைவ்வில் ரசிகர்களுடன் என்ன உரையாடலாம் என யோசித்த பின், ‘இன்னைக்கு நாள் எப்படி போச்சுனு சொல்லுங்க’ என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கும் சூழலில், ரசிகர்கள் தாங்கள் எதிர்கொண்டு வரும் இக்கட்டான சூழலையும், வீட்டில் நடந்த லூட்டிகளையும் ரம்யாவுடன் பகிர்ந்துக் கொள்ள ஜாலியான சென்று கொண்டிருந்த லைவ்வில், அதிரடி திருப்பமாக, ரசிகை ஒருவரின் பதில் ரம்யாவை கொந்தளிக்க செய்துள்ளது.
நேரலையில் கமெண்ட் மூலம் ரம்யாவிடம் உரையாடிய ரசிகை, ‘எனது கணவர் தினமும் என்னை அடிக்கிறாரு. அதனால், என்னோட கல்யாண வாழ்க்கையை முடிச்சிக்கிறேன். எல்லா பெண்களும் உங்களுக்காக நீங்கள் தான் போராட வேண்டும்’ என தெரிவித்துள்ளார். அதுவரை ஜாலியாக சென்று கொண்டிருந்த லைவ் குஸ்தி, ரசிகையின் உருக்கமான பதிவை தொடர்ந்து சோகமாகியது.
‘லைவ்ல இந்த மாதிரி ஒரு மெசேஜ சத்தியமா நான் எதிர்பார்க்கல’ என, ரசிகையின் உருக்கமான பதிவை தொடர்ந்து பேசிய ரம்யா, ‘நீங்க பாதுகாப்பான இடத்துல, உங்க குடும்ப நபர்களுடன் இருப்பீங்கனு நம்புறேன். இந்த மாதிரி பெண்களுக்கு எதிரான மன மற்றும் உடல் ரீதியிலான தாக்குதல்கள் பல நடந்து வருது. உங்களுக்காகவே நான் ரொம்ப வருத்தப்படுறேன்’ என பதிலளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.