scorecardresearch

சம்யுக்தா- விஷ்ணுகாந்த்  பிரிவுக்கு காரணம் நானா? வி.ஜே ரவி விளக்கம்

சம்யுக்தா தனக்கு ப்ரபோஸ் செய்துவிட்டு வெறு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் என்று குற்றம் சாட்டினார் விஷ்ணுகாந்த்

VJ Ravi
சம்யுக்தா – விஜே ரவி – விஷ்ணுகாந்த்

சீரியல் நட்சத்திரங்கள் சம்யுக்தா விஷ்ணுகாந்த் இடையேயான பிரிவுக்கு தான் தான் காரணம் என்று கூறிய விஷ்ணுகாந்தக்கு நடிகர் விஜே ரவி பதிலடி கொடுத்துள்ளார்.

சின்னத்திரையின் சிற்பிக்குள் முத்து சீரியலில் நடித்த விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இருவரும் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்ட நிலையில், திருமணமாகி 2 மாதங்களில் இருவரும் பிரிந்தனர். தங்களது திருமண புகைப்படங்களை இருவரும் சமூகவலைதளங்களில் நீக்கிய நிலையில், இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதில் சம்யுக்தா தனக்கு ப்ரபோஸ் செய்துவிட்டு வெறு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் என்று குற்றம் சாட்டிய விஷ்ணுகாந்த், விஜே ரவி சம்யுக்தாவின் முன்னாள் காதலர். எங்கள் திருமணம் நடந்த பின்னரும் அவர் சம்யுக்தாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அவர் ஏற்கனவே சம்யுக்தாவிடம் மிஸ்பிகேவ் செய்திருக்கிறார் என்று சமீபத்திலர் விஷ்ணுகாந்த் தெரிவித்திருந்தார்.

தற்போது இதற்கு பதில் அளித்துள்ள விஜே ரவி, என்னது நான் மிஸ்பிகேவ் பண்ணேனா? என்னை சுற்றி இத்தனை .ஃபேமிலி மெம்பர்ஸ் இருக்காங்க. என்னோட இன்ஸ்டாகிராம் பேஜ் அவ்வளவு ஈஸியா ஃபாலேயர்களை கொண்டுவந்தது கிடையாது. இன்னைக்கு என்னிட்டம் 470கே ஃபாலேயர்ஸ் இருக்காங்க. இதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.

இந்த ஃபாலோயர்களில் அதிகமானவர்கள் பெண்கள்தான். இதில் சிலரை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியிருக்கிறேன். நான் அவர்களிடம் தவறாக நடந்திருந்தால் அவர்களே அதை தெளிவுபடுத்தியிருப்பார்கள். அவர்களுக்கே தெரியும் நான் எந்த அளவுக்கு ஒரு சகோதரன் போல் பழகி இருக்கேன் என்று. இன்றைக்கு நான் இந்த நிலைமையில் இருக்கிறேன் என்றால் அதற்காக 6 வருடங்கள் கஷ்டப்பட்டிருக்கேன்.

என்னை சுத்தி இருப்பவர்களுக்கு தெரியும் நான் என்ன மாதிரியான ஆளு என்று. இதை நான் யாருக்கும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஒருவரை சொந்த பகையை வைத்துக்கொண்டு எப்படி வீழ்த்தலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கர்மா என்று ஒன்று உள்ளது. என்னுடன் இருக்கும் பலரும் எனக்கு சப்போர்ட்டா இருக்காங்க அவர்கள் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vj ravi explained vishnukanth and samyuktha relationship