scorecardresearch

வந்தாச்சு புது வசுந்தரா: தமிழும் சரஸ்வதியும் சீரியல் மாஸ் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த தர்ஷ்னா ஸ்ரீபால் அந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில், புது வசுந்தரா யார் என்பது குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

வந்தாச்சு புது வசுந்தரா: தமிழும் சரஸ்வதியும் சீரியல் மாஸ் அப்டேட் - VJ Sangeetha enters Thamizhum Saraswathiyum Serial for Dharshna Sripal
வி.ஜே. சங்கீதா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த தர்ஷ்னா ஸ்ரீபால் அந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில், புது வசுந்தரா யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த சீரியலில்
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களான தமிழ், சரஸ்வதி கதாபாத்திரங்களுக்கு அடுத்து, வசுந்தரா கதாபாத்திரம் பார்வையாளர்கள் மத்தியில் அதிக ரசிகர்களைப் பெற்றிருந்தது. வசுந்தரா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபால் ரசிகர்கள் வரவேற்பை அளித்து வந்தனர்.

இந்நிலையில், தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுவாக நடித்து வந்த தர்ஷ்னா ஸ்ரீபால் சமீபத்தில் அதிலிருந்து விலகினார். இதனால், ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் தர்ஷ்னா மீண்டும் வசுவாக வர வேண்டும் என விஜய் டிவி-யிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து, தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுவாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வியும் எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தத நிலையில், வி.ஜே. சங்கீதா சீரியலில் வசுந்தராவாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுவாக களமிறங்கியிருக்கும் வி.ஜே.சங்கீதாவுக்கு தர்ஷ்னா போல வரவேற்பு கிடைக்குமா என்பது ரசிகர்கள் மனங்களில்தான் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vj sangeetha enters thamizhum saraswathiyum serial for dharshna sripal