/tamil-ie/media/media_files/uploads/2021/09/tamil-indian-express-2021-09-02T103544.552.jpg)
vjakshaya latest Tamil News: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியலாக 'ரோஜா' உள்ளது. இதில் பிரியங்கா நாயர், வடிவுக்கரசி ராஜேஷ் மற்றும் சிப்பு சூரியன் நீதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இதற்கு காரணமாக ரோஜா - அர்ஜூன் ரொமான்ஸ் கட்சிகள் இருந்தாலும், அனுவின் வில்லத்தமும் முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/09/Screenshot-2021-09-02-at-10.50.40-AM.png)
இந்த அனு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை ஷாமிலி. இவர் கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியானது. எனவே அவருக்கு பதில் விஜே அக்ஷயா அனுவா களமிறங்கி வில்லியாக மிரட்டி வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/09/Screenshot-2021-09-02-at-10.51.13-AM.png)
வரந்தோறும் வெளியாகி வரும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5-க்குள் இடம் பிடித்து வரும் இந்த ரோஜா சீரியலில் இணைந்துள்ள விஜே அக்ஷயா சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றியவர். இவருக்கு கடந்த வருடம் தான் திருமணம் நடைபெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2021/09/Screenshot-2021-09-02-at-10.51.35-AM.png)
இந்நிலையில்,அக்ஷயா தனக்கு திருமணமாகி ஓராண்டு ஆகியுள்ளதை தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அவரது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, கணவர் நியந்தன் மணிசேகரன் -க்கு திருமண வாழ்த்து தெரிவித்துள்ளார் அக்ஷயா.
/tamil-ie/media/media_files/uploads/2021/09/Screenshot-2021-09-02-at-10.53.03-AM.png)
இதோ அந்த புகைப்படம்…
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.