தமிழ் சினிமாவில் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகர் விஜய் சேதுபதி.
தற்போது சிந்துபாத் படத்தில் நடித்து முடித்திருக்கும் இவர், ’மாமனிதன், கடைசி விவசாயி, சங்க தமிழன், லாபம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் வேங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார் விஜய். இது இவரின் திரை வாழ்க்கையில் 33-வது படம். அவருக்கு ஜோடியாக முதன் முறையாக அமலா பால் நடிக்கிறார்.
இந்தப் படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, சதீஷ் சூர்யா எடிட்டராகப் பணியாற்றுகிறார். படத்திற்கு இசை நிவாஸ் கே பிரசன்னா.
Revealing who’s next in #VSP33.
Welcoming #MagizhThirumeni on board.
Congratulations on your acting debut.
#VSP33WhoIsNext@VijaySethuOffl @Amala_ams @ChandaraaArts @cineinnovations @roghanth @nivaskprasanna @editorsuriya @ruggyz @essakikarthik @onlynikil@ctcmediaboy pic.twitter.com/vdECTLHd9H— Gauthamvasudevmenon (@menongautham) 18 June 2019
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் ஒவ்வொருவரையும் ட்விட்டரில் அறிமுகம் செய்து வருகிறார்கள் படக்குழுவினர். இந்நிலையில் விஜய் சேதுபதி, அமலா பால் தவிர்த்து, மூன்றாவது நடிகர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். ஆம்! இயக்குநர் மகிழ் திருமேனி விஜய் சேதுபதி 33 படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகுகிறார். இவரை ட்விட்டரில் அறிமுகப்படுத்தியிருக்கிறார், இயக்குநர் கெளதம் மேனன்.
‘தடையற தாக்க, மீகாமன், தடம்’ ஆகியப் படங்களின் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற மகிழ், நடிகராக அறிமுகமாவது பலருக்கு ஆச்சர்யத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.