/indian-express-tamil/media/media_files/2025/08/13/screenshot-2025-08-13-182648-2025-08-13-18-27-09.jpg)
இந்த மூத்த நடிகை வேறு யாரும் இல்லை, அனைவராலும் தனது திறமைக்கும் அழகுக்கும் பாராட்டப்பட்ட வைஜயந்திமாலா தான். இவர் தனது நடிப்பு மற்றும் நடனத் திறமையால் மகத்தான புகழைப் பெற்றாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்காகவும் அவர் விமர்சிக்கப்பட்டார் .
திருமணமான ஒருவரைக் காதலித்ததற்காக சிலர் அவரை குடும்பத்தை உடைப்பவர் என்று அழைத்தனர். குங்கா ஜும்னா (1961) படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வைஜயந்திமாலா அணியும் சேலையின் சாயலை அவர் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஓஹோ எந்தன் பேபி... வாராய் எந்தன் பேபி.. இந்த பாடலை எப்படி அவ்வளவு எளிதாக மறந்து கடந்து போய்விட முடியாதோ தேபோன்றுதான் அப்பாடலில் வரும் நடிகை வைஜெயந்திமாலாவையும் எளிதாக கடந்து போய்விட முடியாது.
மெலிந்த தேகம், நீள்வடிவ முகம், கூர்மையான நாசி என அபாரமான அழகுடன், அழகே பார்த்து பொறாமைப்படும் பேரழகியாக பாலிவுட்டில் வலம் வந்த இவர், தொட்டு பார்க்காத உயரங்களே இல்லை.
அந்த அளவுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, போஜ்புரி, வங்க மொழி என 21 ஆண்டுகள் திரையுலகிலும், 15 ஆண்டுகள் அரசியல் களத்திலும் கோலோச்சி இந்தியாவின் பெருமைமிகு அடையாளமாக பார்க்கப்படும் வைஜெயந்திமாலா, நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலும் கை தேர்ந்தவர்.
அதற்கு உதாரணமாகதான் வைஜெயந்திமாலா தனது 90-வது வயதிலும் அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை நிகழ்வுக்கு பின்னர் ஜனவரி 27 முதல் 45 நாட்களுக்கு நடைபெற்ற ராக சேவா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனம் ஆடி, வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தார்.
90 வயதிலும் அபிநயம் குறையாமல், அவர் ஆடிய அற்புத நடன அசைவுகள் சமூக ஊடகங்களில் தீயாய் பரவி அவரது ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. அப்படிபட்ட புகழ்வாய்ந்த நட்சத்திரமான வைஜெயந்திமாலா இன்று(13.8.24) தனது 91-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழ்நாட்டில் இருந்து பாலிவுட் சென்று தென்னிந்திய நட்சத்திரம் என்ற அந்தஸ்து பெற்ற முதல் நடிகையான இவர், தான் நடித்த படங்களில் ‘பரதம்’, ‘குச்சுப்புடி', 'கதகளி’, ‘நாட்டுப்புற நடனம்’ என்று தன்னிடம் இருந்த மொத்த திறமைகளையும் கொட்டி, கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வெற்றிநடை போட்டார்.
1968-ஆம் ஆண்டு சமன்லால் பாலி என்பவரை திருமணம் செய்துகொண்டு "வைஜெயந்திமாலா பாலி" என ஆனார். இவர்களின் திருமண பந்தத்திற்கு அடையாளமாக சுசீந்திர பாலி என்றொரு மகனும் உள்ளார். திருமணம், குழந்தை என்று ஆன பிறகு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமாகி திரைப்படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டார்.
1970-களுக்குப் பிறகு முழுமையாகவே திரையுலகில் இருந்து ஒதுங்கினார். அதன்பிறகு தனக்கு மிகவும் பிடித்த நடனத்தில் மட்டும் கவனம் செலுத்திவந்த நேரத்தில்தான், வேறொரு களத்தை தேர்வுசெய்து அதில் பயணிக்க முடிவுசெய்து, 1984-ஆம் ஆண்டு தன்னை அரசியலில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
திரையில் இருந்து விலகி 14 ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு இந்த முடிவுக்கு வந்தவரை அகில இந்திய காங்கிரஸ் கட்சி சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது மட்டுமின்றி அந்த வருட பாராளுமன்ற தேர்தலிலும் தென்சென்னை தொகுதி வேட்பாளராக களமிறக்கியது.
அதில் வெற்றி வாகை சூடிய வைஜெயந்தி, மக்கள் விருப்பப்படி நாடாளுமன்றம் சென்று தன் அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் மீண்டும் 1989-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு அப்போதும் வெற்றி பெற்றார்.
திரைத்துறையை போன்றே அரசியல் களத்திலும் வெற்றிமேல் வெற்றி பெற்ற வைஜெயந்தி, 1999-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் ராஜ்யசபாவில் மேல்சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதே ஆண்டில் பாஜக -வில் இணைந்தார்.
பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்த அவருக்கு 90-வது வயதில், கடந்த மார்ச் 2-ஆம் தேதி அன்று “பத்ம விபூஷண்” விருது அறிவிக்கப்பட்டது. அதற்காக தனது மகன் சுசீந்திர பாலியுடன் டெல்லி சென்றவர், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து விருதை பெற்றுக்கொண்டார்.
இன்று தனது 91-வது பிறந்தநாளை கொண்டாகிறார். தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத அங்கமாக, இன்றும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக பார்க்கப்படும் வைஜெயந்தி இன்னும் 100 ஆண்டுகளை கடந்து நலமுடன் பயணிக்க வாழ்த்துவோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.