Dada Saheb Phalke Puraskar 2023: இந்த ஆண்டு தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
1960கள் மற்றும் 70களில் வெள்ளித்திரையை ஆண்ட பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு, இந்த ஆண்டு மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஏற்கனவே தேசிய திரைப்பட விருது மற்றும் மூன்று ஃபிலிம்ஃபேர் விருதுகள் பெற்றுள்ளார். மேலும், 1972 இல், இந்திய அரசாங்கம் ரெஹ்மானுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியது, அதைத் தொடர்ந்து அவர் 2011 இல் பத்ம பூஷன் விருதைப் பெற்றார்.
90 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வஹீதா ரஹ்மான் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார். இவர் 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
Waheeda Rehman honoured with Dadasaheb Phalke Award for contributions to Indian cinema
இந்த நிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் ட்விட்டர் எக்ஸில், “இந்திய சினிமாவில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக வஹீதா ரஹ்மான் ஜிக்கு இந்த ஆண்டு மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியையும் மரியாதையையும் உணர்கிறேன். வஹீதா ஜி தனது பாத்திரங்களுக்காக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார்.
அவர் படங்களில் பியாசா, காகஸ் கே பூல், சௌதவி கா சந்த், சாஹேப் பிவி அவுர் குலாம், கைடு, காமோஷி ஆகியவை முக்கியமானவை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க நாரி சக்தி வந்தான் ஆதினியம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த நேரத்தில், அவருக்கு இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவது இந்திய சினிமாவின் முன்னணி பெண்மணிகளில் ஒருவருக்கும், தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒருவருக்கும் உரிய மரியாதையாகும்” எனவும் கூறியுள்ளார்.
வஹீதா ரஹ்மான் எம்.ஜி.ஆரின் அலிபாபாவும் 40 திருடர்களும், விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“