ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் அனைத்துவகை போட்டிகளிலும் தனது அசாத்திய திறமையால் முத்திரை பதித்தவர் டேவிட் வார்னர். கடந்த 2018-ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. தடை காலத்தின் போது சமூக வலைதங்களில் பல்வேறு விதமாக வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
தொடர்ந்து தடையில் இருந்து மீண்டு வந்த வார்னர் ஆஸ்திரேலிய அணியில் தனக்கான தனி இடத்தை உருவாக்கி 3 வகை கிரிக்கெட் தொடர்களிலும் இன்றியமையாத வீரராக வளம் வருகிறார். இடையில் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தலைகாட்டிய அவர், கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாலத்தை உருவாக்கினார்.
அதிலும் தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஆலா வைகுந்தபுரமுலோ படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா என்ற பாடலுக்கு வார்னர் தனது குடும்பத்துடன் நடனமாடிய வீடியோ இன்றளவும் வரலைதங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. டிக்டாக் வீடியோவில் தாக்கத்தை ஏற்படுத்திய வார்னர்,தற்போது டிக்டாக் முடக்கப்பட்டதால், தனது கவனத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு திருப்பியுள்ளார்.
ஆரம்பத்தில் கிரிக்கெட் மற்றும் தனது சுற்றுலாப்பயணம் தொடர்பாக வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்த அவர், முதல்முறையாக புட்டபொம்மா பாடலுக்கு வீடியோவில் முகம் மாற்றும் செலியை பயன்படுத்தி அந்த பாடலில் அல்லு அர்ஜூனுக்கு பதிலாக அவர் நடனமாடுவது போன்று வெளியிட்ட வீடியோ பெரும் வைரலாக இன்றளவும் வளம் வருகிறது. அதன்பிறகு பாகுபலி, ஹல்க் உட்பட பல படங்களின் வீடியோக்களில் தனது முகத்தை மாற்றி பதிவிட்ட வீடியோக்கள் பெரும் வரவேற்பை பெற்றது.
அந்த வகையில் தற்போது புத்தாண்டு தினத்தை முன்னிட்டு புது வீடியோ வெளியிட்டுள்ள வார்னர் இந்த முறை ரஜினி வீடியோவை கையிலெடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் இடம்பெற்ற சும்மா கிழி பாடல்பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த பாடலில் ரஜினியின் முகத்தை மாற்றி தனது முகத்தில் வார்னர் வெளியிட்ட வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
View this post on Instagram