ரஜினிகாந்த் படங்களை பார்த்த சிறுவனின் இதய நோய் சரியானது.. மருத்துவர்களின் பகீர் அறிக்கை!

வேகமாக குணமடைவதற்கு ரஜினிகாந்தின் படங்களும் காரணமாக இருக்கும்

வேகமாக குணமடைவதற்கு ரஜினிகாந்தின் படங்களும் காரணமாக இருக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் : பெங்களூரில் இதய நோயால் அவதிப்பட்டு வந்த சிறுவனின் உடல்நலம் தேறியதற்கு ரஜினிகாந்த படங்களும் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்:

Advertisment

13 வயதாகும் குஷால் என்ற சிறுவன் சில மாதங்களுக்கு முன்பு இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிறுவனின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்.

அவருக்கான மாற்று இதயம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மூளைச்சாவு அடைந்த 20 வயது இளைஞரிடம் இருந்து விமானம் மூலமாக வரவழைக்கப்பட்டது. 4 மணி நேரம் நடைபெற்ற அறுவைசிகிச்சையின் மூலம் குஷாலுக்கு மாற்று இதயம் பொறுத்தப்பட்டது.

சிகிச்சைக்கு பின்னர் சிறுவனின் உடல் நிலை சீரான பின்பு, அவரின் மனநிலை சரியாகவில்லை. சிறுவன் மருத்துவமனையில் யாருடனும் பேசாமலும், சரியாக உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளான். இந்நிலையில் தான் சிறுவனின் பெற்றோர்கள் சிறுவன் குஷாலுக்கு மிகவும் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த படங்களை தினமும் காண்பித்துள்ளனர்.

Advertisment
Advertisements

கடந்த 1 மாதம் காலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களை பார்த்த அச்சிறுவன தற்போது பூரணமாக குணமடைந்துள்ளான். இதுக் குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த ஒருமாத காலமாக மருத்துவமனையில் தங்கியிருக்கும் குஷால், அவருக்கு பிடித்த நடிகரான ரஜினிகாந்தின் படங்களை தொடர்ந்து பார்த்து வந்தார்.

தற்போது அவர் நலம் சீராக உள்ளது. அவர் வேகமாக குணமடைவதற்கு ரஜினிகாந்தின் படங்களும் காரணமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: