Weekend Movie Release : டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதையொட்டி இந்த வாரம் 6 படங்கள் அனைத்து தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆனது.
பண்டிகை என்றாலே அடுக்கடுக்காக படங்கள் வெளியாவது தான். பொங்கல் தீபாவளி போல் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் படங்கள் வெளியாகிறது. முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் டிக்கெட் வசூல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
Weekend Movie Release : இன்றைய ரிலீஸ் படங்கள்
தனுஷ், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஜெயம் ரவி மற்றும் சிவகார்த்திகேயன் என தமிழக மக்களின் உள்ளங்களை கொள்ளைக் கொண்ட முன்னணி நடிகர்கள் அனைவரும் இந்த வாரத்தின் ரிலீஸ் போட்டியில் களமிறங்கியிருக்கின்றனர்.
படங்களின் பட்டியல் :
சீதக்காதி
/tamil-ie/media/media_files/uploads/2018/12/seethakathi-1024x626.jpg)
விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கிறார். 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.
மாரி 2
/tamil-ie/media/media_files/uploads/2018/12/maari-2-1-1024x576.jpg)
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி மற்றும் வரலட்சுமி சர்த்குமார் நடித்திருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
அடங்க மறு
/tamil-ie/media/media_files/uploads/2018/12/adanga-maru-1-1024x576.jpg)
ஜெயம் ரவி நடிப்பில், கார்த்திக் தங்கவேல் இயக்கி இருக்கிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கன்னா நடித்திருக்கிறார்.
கனா
/tamil-ie/media/media_files/uploads/2018/12/kanaa-1.jpg)
சிவகார்த்திகேயன் முதன் முதலில் தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கும் படம். முக்கிய கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் நடித்திருக்கின்றனர். சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் வருகிறார்.
சிலுக்குவார்பட்டி சிங்கம்
/tamil-ie/media/media_files/uploads/2018/12/silukkuvarpatti-singam-1024x465.jpg)
விஷ்ணு விஷால் நடிப்பில், ஓவியா உட்பட பலரும் நடித்திருக்கின்றனர். இப்படத்தை செல்ல அய்யவு இயக்கியிருக்கிறார்.
கே.ஜி.எஃப்
/tamil-ie/media/media_files/uploads/2018/12/kgf-1024x576.jpg)
பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யாஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் படம். தமிழ் உட்பட 5 மொழிகளில் ரிலீஸ்.