மிஸ்டர் மதுரை, பாடி பில்டர்; உடல் உறுப்புகள் செயல் இழந்ததா? ரோபோ சங்கர் கடைசி நிமிடங்கள்!

சென்னை துரைப்பாக்கத்தில் ‘காட்ஸில்லா’ படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்த போது கடந்த செவ்வாய்க்கிழமை, ரோபோ சங்கர் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

சென்னை துரைப்பாக்கத்தில் ‘காட்ஸில்லா’ படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்த போது கடந்த செவ்வாய்க்கிழமை, ரோபோ சங்கர் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

author-image
WebDesk
New Update
download (50)

நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் பிரபலமடைந்த ரோபோ சங்கர், பின்னர் வெள்ளித்திரையில் காலடி வைத்தார். காமெடி கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பெரிய திரையும் சின்னத்திரையும் என வேலையால் பிஸியாக இருந்த அவருக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த நேரத்தில் அவர் கடுமையாக உடல் எடை இழந்தார். ஆனால் அதையடுத்து உடல்நலம் மேம்பட்டு, மீண்டும் திரைப்படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கத் தொடங்கினார்.

Advertisment

கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை துரைப்பாக்கத்தில் ‘காட்ஸில்லா’ படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்த போது, ரோபோ சங்கர் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் நடிகர் தனுஷ் உட்பட பல திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே, அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரோபோ சங்கரின் மரணத்திற்கான காரணம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அவரது இரைப்பை மற்றும் குடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன், பல உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக, சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது வயிற்றுப் பகுதி தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்ததால், ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார் என்றும், இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததன் காரணமாக நேற்று இரவு 9.05 மணிக்கு அவர் உயிரிழந்ததாகவும், மருத்துவமனை நிர்வாகம் விளக்கியுள்ளது.

Advertisment
Advertisements

ரோபோ சங்கரின் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: