டிஆர்பி காரணமா? பழிவாங்கலா? பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா கல்தா வதந்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனது கதாபாத்திரத்தை இப்படி பாதியில் முடித்ததால், நடிகை ஷீலாவும் வருத்தம் தெரிவித்தார். ஷீலாவின் கதாபாத்திரம் முடிக்கப்பட்டதற்கு டிஆர்பி காரணம்தான் என்றும் பழிவாங்கல்தான் காரணம் என்று வதந்திகள் பேசப்படுகிறது.

what reason lakshmi amma character to removed, pandian stores serial, விஜய் டிவி, பாண்டியன் ஸ்டோர்ஸ், நடிகை ஷீலா, லட்சுமி அம்மாள், vijay tv, sheela, tamil serial news

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளின் அம்மாவாக நடித்த நடிகை ஷீலாவை, திடீரென இறந்து விட்டதாகக் காட்டி சீரியலில் அவரது கேரக்டரை முடித்திருக்கிறார்கள் சீரியல் குழுவினர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடங்கியது முதல் கடந்த மூன்று ஆண்டுகளாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதர்களின் தாயாக நடித்து வருகிறார் நடிகை ஷீலா. இவர் வேறு யாருமல்ல, நடிகர் விக்ராந்த்தின் அம்மாதான். பாண்டின் ஸ்டோர்ஸ் சீரியலில், நடிகை ஷீலாவின் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தை முடித்ததற்கு காரணம், என்று ஒரு வதந்தி சின்னத்திரை வட்டாரங்களில் உலா வருகிறது. மகன் மீது உள்ள கோபத்தை அம்மா மீது காட்டிவிட்டார்கள் என்ற பேச்சு வலம் வருகிறது.

அது என்னவென்றால், விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள ஷீலாவின் மகன் நடிகர் விக்ராத் உடன் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதற்கு விக்ராந்த் ஒப்புக்கொண்டிந்ததாக கூறப்படுகிறது. ஆனால், திடீரென அவர் மற்றொரு சேனலில் புது நிகழ்ச்சிக்கு போய் விட்டதால், கோபமடைந்த சேனல் அவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தூக்கிவிட்டதாக பேச்சு எழுந்தது.

ஆனால், அப்படியெல்லாம் இல்லை, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங்கை கூட்டுவதற்காகத்தான், லட்சுமி அம்மா கதாபாத்திரம் இறப்பது போல சீரியல் அமைக்கப்பட்டது. சீரியலில் டி.ஆர்.பி-யை உயர்த்துவதற்கு இப்படி ஏதாவது செய்வது வழக்கம் தானே என்கிறார்கள் சீரியல் குழுவின் வட்டாரங்கள்.

நன்றாக போய்க்கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனது கதாபாத்திரத்தை இப்படி பாதியில் முடித்ததால், நடிகை ஷீலாவும் வருத்தம் தெரிவித்தார். ஷீலாவின் கதாபாத்திரம் முடிக்கப்பட்டதற்கு டிஆர்பி காரணம்தான் என்றும் பழிவாங்கல்தான் காரணம் என்று வதந்திகள் பேசப்படுகிறது. இருப்பினும், இது குறித்து ஷீலாவின் குடும்ப வட்டாரம், விஜய் டிவியில் மற்றொரு சீரியலுக்கு நடிகை ஷீலாவை நடிக்க கேட்டிருக்கிறார்களாம். வெளியில நாலுவிதமாக பெசுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியும்? என்று வதந்திகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: What reason lakshmi amma character ended from pandian stores serial

Next Story
Pandian Stores: புதுசா சொல்லுங்கப்பா… எம்டன் மகன் வடிவேலு கதையை நினைவுபடுத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!pandian stores serial, vijay tv, emtan magan, pandian stores, பாண்டியன் ஸ்டோர்ஸ், விஜய் டிவி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், எம்டன் மகன், வடிவேலு, kannan can't see his mother face till funeral, kannan, dhanam, tamil serial news, vadivelu, emtan magan
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X