"ஜோதிகா ஒரு அழகிய குடும்பத்தை உருவாக்கினார்; எங்கள் குழந்தைகளுக்கு தந்தையாகவும் இருந்தார்": சூர்யா

ஒரு பழைய நேர்காணல் ஒன்றில், ஜோதிகா எவ்வாறு வீட்டில் பல்வேறு கடமைகளை ஏற்றுச் செய்தார் என சூர்யா குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, தன்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Surya Jotika

சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான 'டப்பா கார்டல்' சீரிஸ் தொடர்பான நேர்காணல்களில் நடிகை ஜோதிகா கலந்து கொண்டார். அப்போது, அவர் சூர்யா மீது எந்த அளவிற்கு மரியாதை வைத்திருக்கிறார் என்பதை உணர முடிந்தது. இதேபோன்ற ஒரு உணர்வு, சூர்யாவின் பழைய நேர்காணல் ஒன்றிலும் வெளிப்பட்டது. 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற இத்தம்பதியின் திருமணத்திற்கு பிறகு 2015-ஆம் ஆண்டில் ஜோதிகா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய போது சூர்யா இது போன்ற நேர்காணலில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: When a ‘guilty’ Suriya believed he wasn’t a great father: ‘Jyotika created a beautiful home… played the dad to my young kids’

 

Advertisment
Advertisements

"ஜோதிகா ஒரு அற்புதமான இல்லத்தரசி. அவர், குடும்பத்தின் தந்தை பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்" என்று சூர்யா கூறியிருந்தார். மேலும், "ஜோதிகா தனது திரைப்பயணத்தை தொடங்குவதற்கு அதுவே சரியான நேரம் எனக் கருதினோம். அற்புதமான குடும்பத்தை ஜோதிகா வடிவமைத்தார். அந்த சமயத்தில் தான் மலையாளத்தில் 'How Old Are You?' என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. அது ஜோதிகாவின் கம்பேக் திரைப்படமாக இருக்கும் என்று கருதினோம்" என சூர்யா தெரிவித்தார்.

எனினும், "'36 வயதினேலே' என்று தமிழில் ரீமேக் செய்யப்பட்ட அந்த திரைப்படம் பல விஷயங்களை உணர்த்தும் விதமாக இருந்தது. ஆண்கள் மற்றும் பெண்கள் அப்படத்தை பார்த்து உத்வேகம் அடையலாம். பெண்களை மதிக்கும் விதமாக அப்படம் இருக்கும். கணவன் மற்றும் மனைவி இடையே இதயப்பூர்வமான உரையாடல் நிகழ்வதில்லை என்று நான் நினைக்கிறேன். வீட்டில் பெண்கள் செய்யும் பணிகளை நாம் மதிப்பதில்லை" என்று சூர்யா கூறியிருந்தார்.  

மேலும், தன் மீதும் சில தவறுகள் இருப்பதாக அந்த நேர்காணலில் சூர்யா கூறியிருந்தார். "சில நேரங்களில் எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கும். பெண்கள் தங்களுக்கு விருப்பமானதை செய்ய முடியாமல் இருப்பதற்கு ஆண்கள் காரணமாக அமைகிறார்கள். ஜோதிகா ஒரு நல்ல தாயாகவும், மனைவியாகவும் இருந்து குடும்பத்தை வழிநடத்த என்ன தேவையோ அதை செய்தார். 

ஜோதிகாவை போல் என்னால் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்ய முடியாது. நான் ஒரு ஒழுக்கமான கணவர் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் ஒரு சிறந்த தந்தையா என்று எனக்குத் தெரியவில்லை. எங்கள் குழந்தைகளுக்கு ஜோதிகா, தந்தையாகவும் செயல்பட்டார்" என்று சூர்யா கூறினார்.

Jyothika Actor Suriya

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: