Advertisment

பல பாலிவுட் வாய்ப்புகளை இழந்தேன்... காரணம் இதுதான்: கமல்ஹாசன் பழைய நேர்காணல்

மன்மோகன் தேசாய் உடனான சந்திப்பின் விவரங்களை பற்றி பேசியுள்ள நடிகர் கமல்ஹாசன், பல பாலிவுட் வாய்ப்புகளை ஏன் இழந்தேன் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Kamal Haasan Amitabh Desai

கமல்ஹாசன், அமிதாப் பச்சன் மற்றும் மன்மோகன் தேசாய்

ஆங்கிலத்தில் படிக்க : When Kamal Haasan upset Manmohan Desai as he asked him for script, didn’t offer him tea: ‘Even Amitabh Bachchan doesn’t…’ 

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான கமல்ஹாசன் இந்தியில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும், தான் ஏன் இந்தயில் அதிகம் கவனம் செலுத்தவில்லை என்பது குறித்து பேசிய பழைய நேர்காணல் பற்றிய தொகுப்பு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு விக்ரம் கொடுத்த வெற்றியின் மகிழ்ச்சியில் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகர் கமல்ஹாசன், இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் படம், எச்.வினோத் இயக்கும் படம் என கமிட் ஆகி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன் இந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக ஏக் துஜே கே லியே, சனம் தேரி கசம், சாகர் மற்றும் சேச்சி 420 உள்ளிட்ட படங்கள் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியில் வெற்றிகளை குவித்த படங்கள். ஆனாலும் கமல்ஹாசன், பாலிவுட்டில் தனது இந்த நிலையை தக்கவைத்துக்கொள்ள முயற்சி எடுக்கவில்லை. இது குறித்து ஸ்டார் பிளஸ் உடனான ஒரு பழைய நேர்காணலில், கமல்ஹாசன் தான் இந்தி சினிமாவில் கவனம் செலுத்தாதற்கு காரணம் என்ன என்பது குறித்து பேசியுள்ளார்.

இதில், “புராஜெக்ட்களை முடித்துவிட்டு அடுத்தகட்டத்திற்கு செல்வது என்ற போதை எனக்கு எப்போதும் உள்ளது. நான் அதை கடைபிடிக்கிறேன். ஹிந்தியில் ஒரு ப்ராஜெக்ட்டை முடிப்பதற்குள் ஒன்றரை வருடங்கள் ஆகிறது. இந்த ஒன்றரை வருடங்களில் நீங்கள் தொடர்பை இழக்கிறீர்கள்... அணிந்திருக்கும் ஆடைகள் நாகரீகமாக இல்லாமல் போய்விடும், ரீஷூட் செய்யும் நிலை, உடல் பருமனாக அல்லது மெலிந்துவிடும் நிலை, உடம்பு சரியில்லையில்லாத நிலை என பல விஷயங்கள் நடக்கின்றன. இதனால் சோர்வாகவும் பயமாகவும் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

கமல்ஹாசன் இப்படி கூறியிருந்தாலும், அவருக்கு பாலிவுட் சினிமாவில் இருந்து பல வாய்ப்புகள் குவிந்தது. இது குறித்து அவர் கூறுகையில், பாலிவுட் சினிமாவில் இருந்து எனக்கு வாய்ப்பு கொடுத்தவர்களின் பலர் அன்பானவர்கள், இன்னும் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். இதில் ஒருமுறை நான் ஸ்கிரிப்டைப் பார்க்க வேண்டும் என்று  வற்புறுத்தியபோது இயக்குனரும் தயாரிப்பாளருமான மன்மோகன் தேசாய் மிகவும் வருத்தப்பட்டார். அல்லா ரக்கா என்ற படத்துக்காக என்று நினைக்கிறேன். அப்போது அவருக்கு நெருக்கமாக இருந்த  அமிதாப் பச்சன் கூட படத்தின் ஸ்கிரிப்ட் கேட்கவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் அவரால் கேட்காமல் இருக்க முடியும்என்று நான் சொன்னேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்க முடியும், ஏனென்றால் நான் எந்த அவமானத்தையும், அவமரியாதையையும் குறிப்பிட்டு பேசவில்லை.

இந்த சந்திப்பின்போது அவருடன் வந்த சிலர் இன்றும் எனது நண்பர்களாக இருக்கிறார்கள். நாங்கள் சந்திக்கும்போது இன்னும் அந்த சந்திப்பைப் பற்றி பேசி சிரித்துக்கொள்வோம். மன்மோகன் தேசாய் வருவதை நினைத்து நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன், ஆனால் அப்போது நான் அவருக்கு டீ கூட கொடுக்கவில்லை. எனவே இந்த பையன் முதலில் எனக்கு டீ கொடுக்கவில்லை ஆனால் ஸ்கிரிப்டைக் மட்டும் கேட்கிறார்என்று கூறியிருந்தார். எனக்கு எதிராக பல விஷயங்கள் நடந்தன. நான் நிறைய வாய்ப்புகளைத் தவறவிட்டிருக்கலாம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், ஒரு நேர்காணலில், திரைப்பட தயாரிப்பாளர் விஷால் பரத்வாஜ், கூறுகையில், கமல்ஹாசன் இந்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் படத்தை உருவாக்க விரும்பினார். அது பற்றி நாங்கள் சந்தித்து பேசினோம். அப்போது ஒரு திரைப்படத்தை உருவாக்க முடிவு செய்தோம். அந்த படம் இருமொழியாக இருக்க வேண்டும் என்றும், இந்தி மற்றும் தமிழில் மற்ற நட்சத்திர நடிகர்கள் நடிக்க வேண்டும் என்றும், அது ஒரே நேரத்தில் படமாக்கப்பட வேண்டும் என்றும் கமல்ஹாசன் விரும்பினார்.

நான் இங்கே வியாபார வலையில் விழுந்துவிட்டதால், என் படம் நான் நினைத்தபடி ஒரு வழியில் தான் அஅமைய வேண்டும் என்று மிகவும் பிடிவாதமாக இருந்தேன். இப்போதும் கூட கமல்ஹாசன் என்னைச் சந்திக்கும் போதெல்லாம், ‘எனக்கு கால்ஷீட் எப்போது கிடைக்கும்?’ என்று கேலி செய்வார்என்று சம்தீஷின் அன்ஃபில்டர்டில் விஷால் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment