நயன்- விக்கி திருமணம் தள்ளிப்போக இரண்டே காரணங்கள்… இன்ஸ்டா பேட்டியில் வெளியான சீக்ரெட்!

Nayanthara Vignesh Shivan Marriage : நயன்தாராவுடன் எப்போது திருமணம் என்பது குறித்து இயக்குநர் விக்கேஷ் சிவன் பதில் அளித்துள்ளார்.

Nayanthara Vignesh Shivan Marriage Update Tamil : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அதிக சம்பளம் பெரும் நடிகையாக உள்ள இவர், தற்போது தமிழில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.  மேலும் பெரிய நடிகர்களின் படங்களிலும் நடித்து வரும் இவர், தற்போது ரஜினியின் அண்ணாத்த, நாயகியை மையமாக வைத்த நெற்றிக்கண், விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், 2015-ம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் இவர் நடித்து வெளியான நானும் ரவுடி தான் என்ற படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது காதல் ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருகின்றனர்.  இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனி விமானத்தில் ஊர் சுற்றி வரும் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

ஆனாலும் இது குறித்து இருவருமே மவுனம் காத்து வரும் நிலையில், தற்போது முதல்முறையாக இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் திருமணம் குறித்து கேள்விக்கு பதில் அளித்துள்ளார். நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய விக்னேஷ் சிவனிடம், ரசிகர் ஒருவர், ‘ஏன் நீங்கள் இன்னும் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளவில்லை? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், “திருமணத்துக்கு ரொம்ப செலவு ஆகும். அதனால் அதற்கான பணத்தை சேர்த்துவிட்டு, கொரோனா அச்சுறுத்தல் எல்லாம் நீங்கிய பிறகு திருமணம் செய்து கொள்வேன்” என தெரிவித்துள்ளார். இதனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: When marriage with nayantha director vignesh shivan answer instagram

Next Story
விஜய் டிவி ரசிகர்கள் குஷி… நின்றுபோன சீரியல் மீண்டும் வருகிறது!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X