தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் ரஜினிகாந்த். 70-வயதை கடந்திருந்தாலும், இன்றும், இளம் நடிகர்களுக்கு போட்டியான படங்களில் நடித்து வரும் இவர், 1980-களில்,பல மசாலா படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக தனக்கென ஒரு முக்கிய அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார். இதில் அவர் நடித்த பல படங்கள், அமிதாப் பச்சன் நடித்த இந்தி படங்களின் ரீமேக் ஆகும்.
Read In English: When Rajinikanth revealed the life advice shared by ‘great inspiration’ Amitabh Bachchan: ‘When you are 50 and above…’
அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இந்திய சினிமாவின் சிறந்த சூப்பர் ஸ்டார்கள் மற்றும் ஒப்பற்ற ஜாம்பவான்கள். சினிமா துறையில் அவர்களின் சாதனை இன்றைய தலைமுறை நடிகர்களுக்கும், அடுத்த தலைமுறை நடிகர்களுக்கும் உத்வேகத்தை அளிக்கும். அதே சமயம், ரஜினிகாந்த் எப்போதுமே தனது நண்பர் அமிதாப் பச்சன் உடனான அசைக்க முடியாத நட்பை பற்றியும், அவரை தனது வாழ்க்கையின் உத்வேகமாக கருதுவதாகவும் கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் அமிதாப் பச்சன் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு,மீண்டும் இணைந்து நடித்திருந்தனர். இது அமிதாப் பச்சன் நடித்த முதல் தமிழ் படம். கடந்த 2019 ஆம் ஆண்டு ஐ.எஃப்.எஃப்.ஐ (IFFI) கோல்டன் ஜூபிலி ஐகான் விருதைப் பெறுவதற்கு முன்னதாக தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில், அமிதாப் கூறிய ஒரு ஆலோசனையை இன்றுவரை கடைபிடித்து வருவதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
“ஒருவர் தன்னை பிஸியாக வைத்துக் கொள்ள வேண்டும். இது மிக முக்கியமானது, குறிப்பாக நீங்கள் 50 மற்றும் அதற்கு மேல் வயது ஆகும்போது இப்படி இருக்க வேண்டும், ”என்று தனது நீண்டகால நண்பரும் சக நடிகருமான அமிதாப் பச்சன் தனக்கு கொடுத்த முக்கிய ஆலோசனை இது என் வாழ்க்கையின் முக்கியமான வழிகாட்டுதலுக்குக் காரணம் என்று கூறியுள்ளார். அமிதாப்பை தனது ஒரு 'பெரிய உத்வேகம்' என்று கூறியுள்ள ரஜினிகாந்த், தன்னை பிஸியாக வைத்திருக்குமாறு அடிக்கடி அறிவுறுத்துவதாகக் கூறினார்.
"மக்கள் என்ன சொல்வார்கள்" என்பதைப் பற்றி கவலைப்படாமல் நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதைச் செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் அடிக்கடி என்னிடம் சொன்னார், நான் அதன்படி வாழ்கிறேன்" என்று கூறியுள்ளார். இளம் நடிகர்களுக்கு அவர் கூறும் ஒரு அறிவுரை பற்றி அவரிடம் கேட்டபோது, ரஜினிகாந்த் தான் கற்றுக்கொண்டதை முன்வைத்து, “முதலில் உங்கள் வேலையை அனுபவித்து செய்யுங்கள். நடிப்பை ரசிக்க வேண்டும், அது மிகவும் முக்கியமானது, இது தொழில்துறையில் பலருக்கு ஒரு பாடமாக மாறியுள்ளது என்று தனது சொந்த ஆளுமையின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சத்தைப் பற்றி பேசியுள்ளார்.
திரையில் வெகுஜன இமேஜைப் பொருட்படுத்தாமல், ரஜினிகாந்த் தாழ்மையின் இருக்கும் ரஜினிகாந்த், சினிமாவில், விக் அல்லது மேக்கப் அணிந்து நடித்தாலும், தனது சொந்த வாழ்க்கையில், எந்த விக் மற்றும் மேக்கப் இல்லாமல், சாதாரண ஒரு மனிதாக இருக்கிறார். இந்த தோற்றத்தை பராமரிப்பது பற்றி பேசிய ரஜினிகாந்த், “இது வெறுமனே ஆறுதல் பற்றியது. நான் ஏற்கனவே விக், மேக்கப் அணிந்து, கேமரா முன் நடித்து வருகிறேன். அதையெல்லாம் போட்டுவிட்டு நான் ஏன் வெளியில் நடிக்க வேண்டும். நான் எப்படி இருக்கிறேனோ அப்படி இருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து வருகிறார், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் மற்றும் சௌபின் ஷாஹிர் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். கூலிக்குப் பிறகு, நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் (2023) படத்தின் தொடர்ச்சியாக ஜெயிலர் 2 படத்தில் நடிப்பார் என்று, எதிர்பார்ப்பப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.