விஜய் நடிகராக அறிமுகமாக உதவிய ரஜினிகாந்த்: எப்படி தெரியுமா? க்ளாசிக் ப்ளாஷ்பேக்!

தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு முன்னணி திரைப்பட இயக்குனராக இருந்தபோதிலும், விஜய்யின் நடிப்பு அறிமுகம் ஒரு சாதாரணமான பயணமாக இருக்கவில்லை.

தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு முன்னணி திரைப்பட இயக்குனராக இருந்தபோதிலும், விஜய்யின் நடிப்பு அறிமுகம் ஒரு சாதாரணமான பயணமாக இருக்கவில்லை.

author-image
WebDesk
New Update
Rajinikanth Vijay

ஒரு தலைமுறை ரசிகர்களின் சூப்பர் ஸ்டார் என்றால் அவரின் உண்மையாக அடையாளம், படங்கள் மற்றும் ஆளுமையின் தாக்கம். அந்த வகையில், ரஜினிகாந்த் ஒரு தலைமுறை சூப்பர் ஸ்டார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 1975-ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். அவர் அறிமுகம் ஆகும்வரை அவரைப் போல் யாரும் இல்லை, மேலும் அவரது மேனரிசங்களை பின்பற்ற விரும்பிய பலர் இருந்தனர். சிலரால் அதைச் செய்ய முடிந்தது.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: When superstar Rajinikanth helped ‘Thalapathy’ Vijay convince his father to launch him as an actor

அந்த வகையில், அவரின் மேனரிசங்களை பின்பற்றுவது மட்டுமல்லாமல், தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர் தான் நடிகரும் தற்போது அரசியல்வாதியுமான விஜய். அவர் தீவிர அரசியலில் களமிறங்குவதற்கு முன்பாக தனது திரைப்பயணத்தில் இறுதிக்கப்பட்டத்தை நெருங்கியுள்ளார். ஆனால் விஜய்க்கு இதெல்லாம் எங்கிருந்து தொடங்கியது?

விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு பாராட்டப்பட்ட திரைப்பட இயக்குனராக இருந்தபோதிலும், விஜய்யின் நடிப்பு அறிமுகம் ஒரு சாதாரணமான பயணமாக இருக்கவில்லை. உண்மையில், விஜய் சினிமாவில் நுழைவதை அவரது தந்தை முற்றிலும் எதிர்த்தார், ஏனெனில் அந்தத் தொழில் மிகவும் கடினமாக இருக்கும், மேலும் அவரது மகன் நடிப்புக்கு தகுதியானவரா என்று அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அவரது தந்தையின் எண்ணத்தை மாற்றியது எது என்றால் அது ரஜினிகாந்த்.

Advertisment
Advertisements

2010 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு இயக்குநர்கள் சங்க நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் ரசிகரான விஜய், தான் சினிமாவில் நுழைவதற்கு சூப்பர் ஸ்டார் எவ்வாறு முக்கிய பங்கு வகித்தார் என்பது பற்றி மனம் திறந்து பேசினார். அதில், நான் படிப்பில் மிகவும் பலவீனமாக இருந்தேன், 10-ம் வகுப்புக்குப் பிறகு, எனக்கு சினிமாவில் ஆர்வம் இருந்ததால், அதையே என் தந்தையிடம் தெரிவித்தேன். இருப்பினும், அவர் அந்த யோசனையை ஏற்கவில்லை. ஆனால்’ சினிமாவிற்கு வந்ததற்கு பின்னால் நிறைய போராட்டங்கள் இருந்தன," என்று விஜய் கூறினார்.

நான் அண்ணாமலையில் இருந்து பிரபலமான ரஜினி சார் டைலாக்கை மீண்டும் எனது பாணியில் பேசினேன். நண்பராக இருந்து எதிரியாக மாறிய தனது நண்பரை ரஜினிகாந்த் எப்படி எதிர்கொள்வார் என்பது குறித்த அந்த வசனத்தை பேசி, வீடியோவில் படம்பிடித்து என் அப்பாவிடம் காட்டினேன். பின்னர், நாளைய தீர்ப்பு படத்தில் என்னை அறிமுகப்படுத்த முடிவு செய்தார் என்றுகூறியள்ளார். அந்த படத்தில்,  அண்ணாமலையில் வில்லனின் தந்தையாக நடித்த நடிகர் ராதா ரவியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த்து.

சுவாரஸ்யமாக, படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கண்டிப்பான ஒழுக்கம் கடைப்பிடிப்பவராக அறியப்பட்ட எஸ்.ஏ. சந்திரசேகர், நாளைய தீர்ப்பு படப்பிடிப்பில் கூட தனது மகனின் நடிகரை தடுப்பதை நிறுத்தவில்லை. அதே நிகழ்வில், ராதா ரவி மற்றும் ஸ்ரீவித்யா போன்ற மூத்த நடிகர்களுடன் விஜய் எப்படி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட காட்சியில் நடிக்க வைக்கப்பட்டார் என்பது பற்றி அவர் மனம் திறந்து பேசிய அவர், அவருக்குள் தீப்பொறி இருப்பதை நான் அறிந்தேன்.  அவர் ரஜினி சாரின் படங்களிலிருந்து காட்சிகளை மீண்டும் நடித்தார், ஆனால் நான் இன்னும் அவரை ஒரு நடிகராக்க விரும்பவில்லை. எனவே,  கேமரா அவரை பயமுறுத்தும் என்ற நம்பிக்கையில் முதல் நாளில் இந்த காட்சியை நான் பதிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

உண்மையில், விஜய் மிகவும் ரஜினிகாந்த் ரசிகர், 70க்கும் மேற்பட்ட படங்களைக் கொண்ட தனது தந்தையின் திரைப்படவியலில் இருந்து தனக்குப் பிடித்த படத்தைத் தேர்ந்தெடுக்கச் சொன்னபோது,  தனது தந்தைஏஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஒரே  படமான நான் சிகப்பு மனிதனைத் தேர்ந்தெடுத்தார். நடிப்புத் துறையில், விஜய் தனது நடிப்பு வாழ்க்கை கடைசி படமாக, எச்.வினோத்தின் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.  இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Thalapathy Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: