Advertisment

விஜயிடம் பிடிக்காதது இதுதான்... அவர் மாற்றிக்கொள்ள வேண்டும் : த்ரிஷா ஓபன் டாக்

லியோ மற்றும் கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் வெற்றிக்குப் பிறகு, விஜய் மற்றும் த்ரிஷா மீண்டும் தமிழ் சினிமாவில் மிகவும் நட்சத்திர ஜோடியாக மாறியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
vijay Trisha

லியோ விழாவில் திரிஷா மற்றும் விஜய்

விஜய் – த்ரிஷா நடிப்பில் வெளியான கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டி வரும் நிலையில், விஜயிடம் பிடிக்காத ஒரு விஷயம் என்ன என்பது குறித்து நடிகை த்ரிஷா பகிர்ந்துகொண்ட பழைய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 2004-ம் ஆண்டு வெளியான கில்லி படத்தின் மூலம் முதல்முறையாக விஜயுடன் இணைந்து நடித்த த்ரிஷா அடுத்து ஆதி, திருப்பாச்சி, குருவி ஆகிய படங்களில் நடித்திருந்தார். கடந்த 2008-ம் ஆண்டு வெளியான குருவி படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், 15 வருட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தின் மூலம் மீண்டும் விஜய் – த்ரிஷா ஜோடி இணைந்தது.

ஆங்கிலத்தில் படிக்க : When Trisha revealed the annoying thing about Vijay

இனிமேல் விஜய் – த்ரிஷா ஜோடி மீண்டும் எபபோது இணைவார்கள் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு சமீபத்தில் வெளியான கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சாதனை படைத்து, தமிழ் சினிமாவின் வறட்சியான காலகட்டத்திற்கு சரியான பொழுதுபோக்காக அமைந்தது. சமூக ஊடகங்களில் கில்லி படம் தொடர்பான பேச்சுக்கள் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில், அனுஹாசனின் பிரபலமான நிகழ்ச்சியான காஃபி வித் அனுவுக்காக விஜய் மற்றும் த்ரிஷாவின் பழைய பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் எப்போதும் எளிதில் அணுகக்கூடிய ஒரு ஹீரோ, இதுபோன்ற பேச்சு நிகழ்ச்சிகளை வசீகரிப்பவர். சமீப வருடங்களில் தமிழ் சினிமாவில் இந்த நடிகர் இணையற்ற இடத்தை அடைந்துள்ளார். சமீபத்தில் அவர் கேரளாவிற்கு சென்றபோது வெளியான பல வீடியோக்கள் இணையத்தில் தற்போதுவரை பெரிய வைரலாக பரவி வருகிறது. ஆனாலும் இந்த நேர்காணலில், கேள்விக்கு பதில் சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் போராடும் ஒரு கூச்ச மற்றும் அமைதியான மனிதராக விஜய் வருகிறார். அதிலும் த்ரிஷா நிகழ்ச்சிக்கு வந்தவுடன், அவரது கூச்சம் பன்மடங்கு அதிகரிக்கிறது.

இந்த பேட்டியில் விஜய் பற்றி பேசிய த்ரிஷா,ஷூட்டிங் ஸ்பாட்டில், அனைவரும் வேடிக்கையாக இருக்கும்போது, ​​அவர் மட்டும் ஒரு மூலையில் அமர்ந்து மணிக்கணக்கில் சுவரைப் பார்த்துக் கொண்டிருப்பார். அவர் எப்போதும் அமைதியாக இருப்பார், படப்பிடிப்பில் அதிகம் பேசமாட்டார். இது குறித்து அவரிடம் கேட்டால்நான் உங்கள் அனைவரையும் போலல்லாமல் காட்சியைப் பற்றி நினைக்கிறேன். நான் காட்சியைப் பற்றி கவலைப்படுகிறேன் என்று சொல்வார் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து ரேபிட்-ஃபயர் ரவுண்டின் போது, த்ரிஷாவிடம் விஜய்யைப் பற்றியும் அவரிம் நீங்கள் வெறுக்கும் ஒரு குணத்தைப் பற்றி, அவர் எதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த த்ரிஷா,அவரது அமைதி. அவர் அப்படிப்பட்டவர் என்பது எனக்குப் புரிகிறது, ஆனால் சில சமயங்களில் அவர் அணுக முடியாதவர் போல் இருக்கிறார். இதனால் அவரை பார்ப்பவர்கள் தங்கள் ஏதேனும் தவறு செய்துவிட்டோமோ என்று நினைக்க வைக்கிறார். அவர் இன்னும் கொஞ்சம் அணுகக்கூடியவராக இருக்க வேண்டும் என்று சொல்ல, விஜய்... அவரை அமைதியாகக் கவனித்தார்!

இந்த பேட்டியின் போது, த்ரிஷா 11 ஆம் வகுப்பு படிக்கும் போது மிஸ் சென்னை பட்டத்தை வென்றது பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த போட்டியில் ஒரு கேள்விக்கு தான் அளித்த பதில் தான் விருதை வெல்ல முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். என்னிடம் இல்லாத ஒரு தரம் என்ன என்று கேட்டார்கள். நான், ‘நேர்மைஎன்றேன். நாம் அனைவரும் நிறைய பொய்களைச் சொல்கிறோம். நான் அப்படித்தான் சொன்னேன்என்று த்ரிஷா கூறியுள்ளார்.

விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் சிறந்த ஜோடி என்று ஒப்புக்கொண்ட நிலையில், விஜய்யும் அதே கருத்தைக் ஒப்புக்கொண்டுள்ளார். விஜய்-அசின், விஜய்-நயன்தாரா, விஜய்-த்ரிஷா ஆகியோரில் சிறந்த ஜோடியைத் தேர்வு செய்யும்படி கேட்டபோது, ‘விஜய் – த்ரிஷா என்ற கடைசி ஆப்ஷனை தேர்வு செய்தார். அது உண்மை என்று நான் நினைக்கிறேன்." த்ரிஷாவும் குறிப்பிட்டுள்ளார்

அரசியல் வருகைக்காக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலக உள்ளதாக விஜய், கூறியிருப்பதால் த்ரிஷாவையும் விஜய்யையும் வெள்ளித்திரையில் மீண்டும் ரசிகர்கள் பார்ப்பார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் விஜய். இருப்பினும் விஜய் அடுத்து ஒரு படம் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே த்ரிஷா, அஜித்தின் விடாமுயற்சி, சிரஞ்சீவியின் விஸ்வம்பரா மற்றும் கமல்ஹாசனின் தக்லைஃப் உட்பட பல பெரிய படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Trisha Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment