வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய நடிகை லட்சுமி மேனன்: ஐ.டி ஊழியரை கடத்தி தாக்கியதாக பரபரப்பு புகார்

இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, லட்சுமி மேனன் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, லட்சுமி மேனன் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Lakshmi Menon

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வரும் லட்சுமி மேனன், கொச்சியில் ஒரு இளம் ஐடி ஊழியரைக் கடத்தி, தாக்கியதாக ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் மற்றும் மூன்று நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர், மூன்று குற்றவாளிகளைக் கைது செய்துள்ள நிலையில், லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:

Advertisment

சம்பவம் கொச்சியில் உள்ள ஒரு ரெஸ்டோபாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) இரவு நடந்துள்ளது. அங்கு, பாதிக்கப்பட்ட ஐடி ஊழியரின் நண்பருக்கும், நடிகை லட்சுமி மேனனின் குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் பெரிய மோதலாக வெடித்த நிலையில், சாலைக்கு மோதிக்கொண்டுள்ளனர். இதில் எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலம் அருகே, நடிகை மற்றும் அவரது நண்பர்கள், அந்த இளைஞர் குழுவைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக புகாரளித்த இளைஞர், தான் அங்கிருந்து கடத்தப்பட்டு, தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில், கைது செய்யப்பட்டவர்கள் மிதுன், அனீஷ் மற்றும் சோனாமோல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கடத்தல், முறையற்ற தடுப்பு, மற்றும் வார்த்தை ரீதியான துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இளைஞர், ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "அவர்கள் மது போதையில் இருந்தனர், என் நண்பரை நோக்கி கத்தத் தொடங்கினர். மேலும் பிரச்சனை வேண்டாம் என்று நினைத்து நாங்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம். ஆனால், அவர்கள் எங்களைப் பின்தொடர்ந்து, வடக்கு மேம்பாலத்தில் எங்களது காரைத் தடுத்து நிறுத்தினர். அவர்களில் ஒருவர் எங்கள் காரை அடிக்கத் தொடங்கினார். நான் வெளியே வந்து அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றபோது, அவர்கள் என்னைக் கடத்தித் தாக்கினர். லட்சுமி மேனன் எனது செல்போனைப் பறித்து, வார்த்தைகளால் என்னை இழிவுபடுத்தினார்" என்று கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

இது குறித்து, காவல்துறை வட்டாரங்கள், "வாக்குவாதம் முற்றியதால், குற்றவாளிகளில் ஒருவர் அந்த இளைஞரை வலுக்கட்டாயமாகத் தங்கள் காருக்குள் இழுத்துச் சென்றுள்ளார். பின்னர், அவர்கள் அந்த இளைஞரைத் தாக்கி, மிரட்டி, திட்டி, நள்ளிரவில் பரவூர் அருகே வேடிமாரா சந்திப்பில் இறக்கிவிட்டுள்ளனர். நடிகையின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. அவர் தலைமறைவாக உள்ளார். நாங்கள் அவரைக் கண்டுபிடித்துக் கைது செய்வோம்" என்று தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து லட்சுமி மேனனோ அல்லது அவரது குழுவினரோ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

கொச்சியைச் சேர்ந்த லட்சுமி மேனன், 2011-ல் 'ரகுவின்டே சுவாந்தம் ராசியா' என்ற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அவர் தமிழ்த் திரையுலகில் 'சுந்தரபாண்டியன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, 'கும்கி' படத்தில் தனது நடிப்பின் மூலம் பரவலான பாராட்டைப் பெற்றார். இந்த இரண்டு படங்களுக்கும் அவர் சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதையும் வென்றார்.

அவரது குறிப்பிடத்தக்க தமிழ்ப் படங்களில் 'நான் சிகப்பு மனிதன்' (2014), 'ஜிகர்தண்டா' (2014), 'கொம்பன்' (2015), 'வேதாளம்' (2015), 'மிருதன்' (2016), மற்றும் 'சந்திரமுகி 2' (2023) ஆகியவை அடங்கும். கடைசியாக அவர் ஆதி பிணிசெட்டி, சிம்ரன் மற்றும் லைலாவுடன் இணைந்து நடித்த 'சப்தம்' (2025) என்ற ஹாரர் திரில்லர் படத்தில் காணப்பட்டார்.

Lakshmi Menon

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: