பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி இனி எகிறும்... உள்ளே வந்திருக்கும் நடிகர் யாருன்னு பாருங்க!

Who is Bakkiyalakhmi Serial New Businessman Tamil News பலே விஜய் டிவி என்றும் பலரும் தங்களின் வாழ்த்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

Who is Bakkiyalakhmi Serial New Businessman Tamil News பலே விஜய் டிவி என்றும் பலரும் தங்களின் வாழ்த்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Who is Bakkiyalakhmi Serial New Businessman Tamil News

Who is Bakkiyalakhmi Serial New Businessman Tamil News

Who is Bakkiyalakhmi Serial New Businessman Tamil News : சன் டிவிக்கு இணையான பல சீரியல்கள் விஜய் டிவியும் ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில், பாக்கியலட்சுமி அனைவரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. அதிலும் ப்ரைம் டைம் சீரியலான இதில் ஏராளமான ட்விஸ்டுகள் நிறைந்திருக்கும். என்றாலும், சமீபத்தில் இதன் டிஆர்பி ரேட்டிங் மோசமான நிலையில் உள்ளது. காரணம், கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்ததுதான். ஆனால், இனி டிஆர்பி ரேட்டிங் ஏறும் என்று பாக்கியலட்சுமி ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்குக் காரணம் ஒரு நடிகரின் என்ட்ரி.

Advertisment

குடும்பத் தலைவிகளின் பிரச்சனைகள், தினசரி வாழ்வில் அவர்கள் சந்திக்கும் சவால்கள் என மிகவும் எதார்த்தமான சீரியல்களில் பாக்கியலட்சுமியும் ஒன்று. சில மசாலாக்களையும் தூவி, எதிர்பார்ப்பைக் கிளப்பிவரும் இந்த சீரியலில் சமீபத்தில் கொஞ்சம் தோய்வு ஏற்பட்டுள்ளது. அதனால், கதையில் எப்படியெல்லாம் சுவாரசியத்தைக் கூட்டலாம் என்று நினைத்த இயக்குநருக்கு சட்டென ஒரு ஐடியா தோன்றிருக்கிறது.

சமையல் ஆர்டர் எடுத்து உணவு வகைகளை சமைத்து சப்ளை செய்து வரும் பாக்கியாவிற்கு, திடீரென 1000 ஆர்டர்கள் கிடைக்கின்றன. இதை எப்படி செய்வதென்று திணறிக்கொண்டிருக்கும் வேளையில், வீட்டில் உள்ள மற்ற அனைவரும் கேலி செய்ய, தன்னுடைய அம்மா மற்றும் மகன் எழில் மட்டுமே பாக்கியாவிற்கு உறுதுணையாக நிற்கின்றனர்.

இந்நிலையில், பாக்கியாவின் சமையல் ஒரு தொழிலதிபருக்கு மிகவும் பிடித்துப்போய்விட, பாக்கியாவை நேரில் அழைத்துப் பாராட்டி அவருக்கு 1000 ஆர்டர்களையும் கொடுக்கிறார். 'யாருடா இந்த பிசினஸ்மேன்?' என்று சிலாகித்துக்கொண்டிருந்த வேளையில்தான் நமக்கு அந்த முக்கியமான நபரை அறிமுகம் செய்கின்றனர்.

Advertisment
Advertisements

ஆம், சம்பந்தமே இல்லாமல் ஏன் இந்த தொழிலதிபரின் அறிமுகத்திற்கு இவ்வளவு பில்ட் அப் என்று விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்க, பாக்கியாவை உயரவைக்கப் போகும் அந்த கதாபாத்திரத்தில் களமிறங்கப்போவது யார் என்கிற வாதமும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அந்த கதாபாத்திரத்துடன் பாக்கிய எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

அந்த முக்கிய தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடிப்பவர், பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் மகன் சஞ்சய் சங்கர். 'தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட்' என்று பெயர்பெற்ற ஜெய்ஷங்கர், ஏராளமான துப்பறியும் படங்களில் நடித்தவர். அவருடைய மகன், சஞ்சய் சின்னத்திரையில்  நடிக்க வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே, மௌன ராகம் சீரியலில் நாகேஷின் மகன் ஆனந்த் பாபுவை களமிறக்கியது விஜய் டிவி. அவரைத் தொடர்ந்து இப்போது பாக்யலட்சுமி சீரியல் மூலம் ஜெய்சங்கரின் மகனையும் நடிக்க வைத்திருக்கிறது. பலே விஜய் டிவி என்றும் பலரும் தங்களின் வாழ்த்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: