Who is Bigg Boss Tamil 5 wild card entry Amir Tamil News ஒரே வாரத்தில், முன்னாள் போட்டியாளர் அபிஷேக் மற்றும் சூப்பர்கூல் கொரியோகிராபர் அமீரின் என்ட்ரி பெரும் பரபரப்பை உண்டாகியுள்ளது.
Who is Bigg Boss Tamil 5 wild card entry Amir Tamil News ஒரே வாரத்தில், முன்னாள் போட்டியாளர் அபிஷேக் மற்றும் சூப்பர்கூல் கொரியோகிராபர் அமீரின் என்ட்ரி பெரும் பரபரப்பை உண்டாகியுள்ளது.
Who is Bigg Boss Tamil 5 wild card entry Amir Tamil News
Who is Bigg Boss Tamil 5 wild card entry Amir Tamil News : மற்ற சீசன்களைவிட பிக் பாஸ் சீசன் 5-ல் ஏராளமான புதிய முகங்கள். எப்போதும் பின்பற்றும் பேட்டர்னை மாற்றி, திருநங்கை, சாமானிய கலைஞர் உள்ளிட்டவர்களை இணைத்துக்கொண்டது இந்த சீசன். ஸ்க்ரீனில் தோன்றி புகழ் சம்பாதித்தவர்களைவிட, வெற்றி பெற்றவர்களின் காரணியாக ஸ்க்ரீனுக்கு பின் உழைப்பவர்கள் முகம் பலருக்குத் தெரியாமலே போய்விடுகிறது. ஆனால், அப்படிப்பட்ட முகத்தையும் வைல்ட் கார்ட் என்ட்ரியில் சேர்த்திருக்கிறது பிக் பாஸ் தமிழ்.
Advertisment
51 நாட்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5-ல் நேற்று ஓர் வைல்ட் கார்ட் என்ட்ரி இருந்தது. 'சொர்க்கமா சொர்க்கமா..' எனும் பிரபு தேவா பாடலுக்கு அசத்தலாக அதுவு அசல் பிரபு தேவா போலவே நடனமாடிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்த அந்த நபர், நடன இயக்குநர் அமீர். விஜய் டிவியின் முகம் என்பதால், மாஸ்க் அணிந்த போதிலும் பிரியங்கா எளிதாக அவரை கண்டுபிடித்துவிட்டார்.
விஜய் டிவியில் ஏற்கெனவே ஒளிபரப்பான 'ஜோடி', 'டான்ஸ் Vs டான்ஸ்', 'டான்ஸ் ஜோடி டான்ஸ்', 'கிங்ஸ் ஆஃப் டான்ஸ்' உள்ளிட்ட பல்வேறு நாடன் நிகழ்ச்சிகளில் அமீர் கோரியோகிராபராக பணிபுரிந்திருக்கிறார். மேலும், சமீபத்தில் முடிந்த 'பிக்பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சிக்கும் இவர் கொரியோகிராஃப் செய்திருக்கிறார். பிரபு தேவாவின் தீவிர ரசிகரான இவர், பல்வேறு திரைப்படங்களுக்கும் கோரியோ செய்திருக்கிறார்.
Advertisment
Advertisements
நடன உலகில் கலக்கிக்கொண்டிருக்கும் இவர், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே வாரத்தில், முன்னாள் போட்டியாளர் அபிஷேக் மற்றும் சூப்பர்கூல் கொரியோகிராபர் அமீரின் என்ட்ரி பெரும் பரபரப்பை உண்டாகியுள்ளது. இதனால், இம்முறை இரண்டு பேர் வீட்டை விட்டு வெளியேறுவார்களா என்கிற குழப்பமும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, இந்த வாரம் யார் தொகுத்து வழங்குவார்கள் என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. மொத்தத்தில், இந்த ஐந்தாவது சீசன், ஏராளமான சர்ச்சைகளையும் கேள்விகளையும் உள்ளடக்கியுள்ளது. அதன் விடைகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்...
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil