/indian-express-tamil/media/media_files/2025/09/03/who-is-jaden-immanuel-13-year-old-racing-prodigy-tamil-actor-and-racer-ajith-kumar-got-autograph-tamil-news-2025-09-03-09-57-52.jpg)
13 வயதான இளம் ரேசர் ஜேடன் இமானுவேல் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். அவர் 10 வயது முதல் மினி ஜி.பி (MINI GP) ஜெர்மனி பந்தயத்தில் பங்கேற்று வருகிறார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள இவர் கடைசியாக, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரலில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதனால், நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படமான ஏ.கே65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
இதனிடையே, நடிகர் அஜித் கார் ரேஸ் போட்டியில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தற்போது ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் அஜித் பங்கேற்று வருகிறார். அங்குள்ள ரசிகர்கள் அஜித் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது அவர்களிடம் பேசிய அஜித், “கார் ரேஸை பிரபலப்படுத்துங்க, எனக்காக அல்ல. இங்கு கார் பந்தயத்தில் ஈடுபடும் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துங்கள். நிறைய பேர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் எளிதானதுனு தவறாக நினைக்கிறாங்க.
மோட்டார் ஸ்போர்ட்ஸை மக்களிடையே புரோமோட் பண்ணுங்க, என்னை இல்ல. இந்த விளையாட்டு உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் எவ்வளவு சவாலானதுன்னு மக்களுக்கு தெரியப்படுத்துங்க. இங்குள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் உடல் ரீதியாக, மனரீதியாக கஷ்டப்படுகிறார்கள். அவர்களின் கஷ்டங்கள் நிறைய பேருக்கு தெரிவதில்லை. நிச்சயம் ஒருநாள் இந்திய வீரர்களும் பார்முலா ஒன் கார் ரேஸ் மட்டுமல்ல அனைத்து விதமான ரேஸ் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் சாம்பியன் ஆவார்கள். ஒரு நாள் இந்தியாவிலிருந்து நிச்சயமாக ஒரு பார்முலா 1 சாம்பியன் உருவாகுவார் என்று நம்பிக்கை இருக்கு.” என்று கூறியிருந்தார்.
அஜித்தின் இந்த பேச்சு வைரலான சூழலில், தன்னை விட கார் ரேஸ் மீது கொண்ட காதல் எவ்வளவு என்பதை இது வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையில், நடிகர் அஜித் 13- வயது கார் பந்தய வீரரான இமானுவேல் ஜேடனிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டார். அஜித்தின் இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
யார் இந்த ரேசர் ஜேடன்?
13 வயதான இளம் ரேசர் ஜேடன் இமானுவேல் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். அவர் 10 வயது முதல் மினி ஜி.பி (MINI GP) ஜெர்மனி பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். ஐரோப்பாவில் 3 சீசன்கள் முழுமையாக ரேஸிங் செய்த இளம் இந்தியர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இந்த நிலையில் தான், இளம் ரேசர் ஜேடன் இமானுவேலிடம் ஆசையாக ஆட்டோகிராஃப் பெற்று இருக்கிறார் நடிகரும், ரேசருமான அஜித் குமார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.