காளி என்ற ஆவணப்படம் தொடர்பாக சமீபத்தில் இயக்குநர் மற்றும் எழுத்தாளருமான லீனா மணிமேகலை ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தார். இது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து மதத்தை இழிவு செய்யும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்து அடிப்படைவாதிகள், இவருக்கு எதிராக #arrest Leena Manimekala என்ற ஹேஷ் டேக்கை டிரெண்டு செய்தனர். இந்நிலையில் டெல்லி காவல்துறையினர் 153 A மற்றும் 295 A என்ற இருபிரிவுகளுக்கும் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தது. லீனா மணிமேகலையின் போஸ்டர் இந்து மதத்தை புண்படுத்துவதாகவும், இருதரப்பிற்கும் இடையில் மோதல்களை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் யார் லீனா மணிமேகலை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில், விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு தமிழ் ஆசிரியர், இயக்குநர் பாரதிராஜா படங்களை வைத்து இவரது அப்பா ஆய்வு செய்துள்ளார். இவர் சிபிஐ கட்சியின் பல செயல்பாடுகளில் முன்நின்று பணியாற்றி இருக்கிறார். இவர் பொறியியல் படிப்பை முடித்தார். இவரது அப்பாவின் மரணத்திற்கு பிறகு, 18 வயதிலே இவருக்கு திருமணம் செய்யப்பட்டது. இத்திருமண பந்தத்தில் இருந்து வெளியேறி, மாற்று மதத்தில் திருமண்ம் செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து அவர் விவாகரத்து செய்துகொண்டார். தான் ஒரு பை செக்ஷுவலாக தன்னை உணர்ந்து அதை வெளிப்படுத்திகொண்டார்.
இவர் இயக்கிய செங்கடல் ஆவணப்படமும் கடும் விமர்சனங்களுக்குள்ளனாது. சென்சார் செய்யும் அளவிற்கு இதில் வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள், மற்றும் இலங்கை-இந்தியா சுமூக உறவை பாதிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறப்பட்டது. அப்போதும் லீனா மணிமேகலை கடும் எதிர்ப்புகளை சந்திதார். இதுபோலவே மாடத்தி திரைப்படமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் வஞ்சிக்கப்பட்டு, கடவுளாகிறார் என்பது போல கதை அமைக்கப்படிருந்தது. இதில் இந்து கடவுகள், குறியீட்டளவில் சித்தரிக்கப்பட்டது தொடர்பான விமர்சனங்கள் எழுந்தது.